பக்கம்:மதன கல்யாணி-2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 311

கமிஷனருடைய கச்சேரியில் இருபது ஜெவான்கள் கத்தி, துப்பாக்கிகளோடு எப்போதும் காவல் காத்திருப்பார்கள்; ஆகையால் அங்கே இருந்தால் உங்களுக்கு எவ்வித இடைஞ்சலும் உண்டாகாது. எதிரிகள் எத்தனை பேராக இருந்தாலும் அங்கே வந்து வாலையாட்ட முடியாது. கமிஷனர் துரை இன்று ராத்திரி முழுதும் மைலாப்பூரிலேயே இருப்பார். ஆகையால் அவருடைய கச்சேரியில் உங்களை எல்லாம் கொண்டு வந்து பந்தோபஸ்தாக வைக்கும்படி அவரே சொல்லிவிட்டுப் போனார். அந்த மாதிரி செய்வதே உசிதமாகத் தோன்றுகிறது. இங்கே இருந்து நாம் எதிரிகளோடு சண்டை செய்தால், எத்தனை பேர் உயிரைவிட நேருமோ! எத்தனை பேருக்கு மண்டை உடையுமோ அதனால் என்னென்ன வியாஜ்ஜியங்களும் வழக்குகளும் அவமானமும் உண்டாகுமோ அதை இப்போது சொல்ல முடியாது. வந்தபின் காப்பதைவிட வரும் முன் காப்பதே விவேகிகளுக் கழகு; இன்றைய ராத்திரி பொழுது இப்படிக் கழிந்து போகுமானால், நாளைய தினம் முதல் ஆயிரம் ஜெவான்கள் வேண்டுமானாலும் நான் அனுப்பத் தடையில்லை. இப்போது ஒரு நிமிஷ நேரங்கூட நாம் தாமசிக்கக்கூடாது. நீங்கள் யோசனை செய்து உங்களுடைய முடிவை உடனே தெரிவியுங்கள்” என்றார்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாளும் சிவஞான முதலியாரும் மிகுந்த திகிலடைந்த நடுநடுங்கிச் சிறிது நேரம் யோசனை செய்து, கடைசியில் இன்ஸ்பெக்டர் சொன்னபடி கமிஷனருடைய கச்சேரி யில் போயிருப்பதே நல்லதெனத் தீர்மானித்துக் கொண்டு தங்களது முடிவை இன்ஸ்பெக்டரிடத்தில் உடனே வெளியிட்ட னர். அவர் அதைக் கேட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்தவராய், உடனே பெண்களை அழைத்துக் கொண்டு புறப்படும்படி கல்யாணியம்மாளிடத்தில் கூறியனுப்பிவிட்டு, சிவஞான முதலி யாரைப் பார்த்து, “நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். இங்கே இருக்கும் ஆள்களுக்கு ஒரு சங்கதி சொல்லிவிட்டு வாருங்கள். பங்களாவில் உள்ள சொத்துகளை எல்லாம் அவர்கள் ஜாக்கிரதை யாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு எதிரிகள் வந்தால், இவர்கள் அவர்களோடு சண்டை போட வேண்டாம். எஜமானியம்மாளும் பெண்களும் மைலாப்பூருக்குப் போயிருப்பதாகவும், ராத்திரி முழுதும் அங்கேயே இருந்துவிட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/315&oldid=646222" இலிருந்து மீள்விக்கப்பட்டது