பக்கம்:மதன கல்யாணி-2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 313 வண்டியாகையால், அவர்கள் மூவரும் இருந்த பாகம் பெட்டி வண்டி போல மூடப்பட்டது. கையில் கத்தி துப்பாக்கிகளோடு இருந்த ஐந்து ஜெவான்களும் அதன் நாற்புறங்களிலும் உள்ள காலடி வைக்கும் தகட்டின் மேல் ஜாக்கிரதையாக நின்று கொண்டனர். முன்னால் உட்கார்ந்து கொண்ட இன்ஸ்பெக்டர் குலாம்ராவுத்தர் வண்டியை ஒட்ட ஆரம்பித்தார். - சிவஞான முதலியாரோ இன்ஸ்பெக்டர் சொன்னபடி ஆட்களுக்கெல்லாம் செய்தி சொல்லி நிரம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவும் எதிரிகள் வந்தால் நயமாகவே சொல்லி அவர்களை அனுப்பி விடவும் கூறிவிட்டு, ஐந்து கிழத்தாதிகளை அழைத்துக் கொண்டு வந்து தமக்காக ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்த ஸாரட்டில் அவர்களை எல்லாம் ஏற்றி, தாமும் உட்கார்ந்து கொண்டு வண்டியை ஒட்டலானார். முன்னால் போன மோட்டார் வண்டியிலிருந்த இன்ஸ்பெக்டர் சிவஞான முதலியாரைப் பார்த்து வண்டியை விசையாக ஒட்டிக் கொண்டு வரச்சொல்ல, இரண்டு வண்டிகளும் பங்களாவிற்குள்ளே இருந்து வெளிப்பட்டு பக்கத்திலிருந்த ராஜபாட்டைக்கு வந்து திரும்பின. அப்போது அங்கே ஆலமரங்களின் மறைவிலிருந்து, “வண்டியை விடாதே யுங்கள்; வண்டியை விடாதேயுங்கள்; பெண்ணை ஒளிக்கப் போகிறார்கள்” என்ற குரல்கள் உண்டாயின. அதே காலத்தில் மூங்கில் தடிகளின் ஒசைதடதடவென்று கேட்டது. இருளிலிருந்து சில ஆட்களும் வெளிப்பட்டனர். அந்த விபரீதமான ஓசையைக் கேட்ட கல்யாணியம்மாள் முதலியோர் கிடுகிடுத்து நடுநடுங்கிக் கண்ணிர் விடுத்துக் கலங்கி அழத் தொடங்கினர். உடனே இன்ஸ்பெக்டர், “முதலியாரே! விசையாக ஒட்டிக்கொண்டு வாருங்கள்; நிற்க வேண்டாம்” என்று ஓங்கிக் கூறிய வண்ணம் மோட்டாரின் விசையை எவ்வளவு அதிகமாக முறுக்க முடியுமோ அவ்வளவு விசையாக முறுக்கி விடவே, மோட்டார் வண்டி கணிபொறி தெறிக்கக்கூடிய அவ்வளவு பிரமாதமான விசையோடு பறக்க ஆரம்பித்தது. சிவஞான முதலியாரும் சவுக்கை ஓங்கித் தமது பலம் கொண்ட மட்டும் குதிரையை அடிக்க, அது நல்ல உன்னத ஜாதிக் குதிரை ஆதலால், நாற்கால் பாய்ச்சலில் பிடுங்கிக் கொண்டு காற்றாகப் பறந்தது; மரங்களின் மறைவிலிருந்து வெளிப்பட்ட ஆட்கள் அந்த வண்டியைத் துரத்திக் சின்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/317&oldid=646226" இலிருந்து மீள்விக்கப்பட்டது