பக்கம்:மதன கல்யாணி-2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 மதன கல்யாணி

பாட்டிலே உள்ளே நுழைகிறீர்களே? என்ன ஐயா விசேஷம்? என்று அதட்டிக் கேட்ட வண்ணம் குறுக்கே வந்து அவர்களை எல்லாம் திரும்பித் தள்ளிக் கொண்டு வந்து தாழ்வாரத்தின் கீழே இறக்கிவிட, அப்போது இரைப்படங்காமை யால் மேல்மூச்சு விடுத்துக் கொண்டிருந்த சிவஞான முதலியார் உடனே மறுமொழி சொல்லமாட்டாமல் சிறிது தத்தளித்தார். அதைக் கண்ட ஜெவான் அவரைப் பார்த்துப் புரளியாகப் பேசத் தொடங்கி, “என்ன ஐயா கேட்கிறேன். ஆடு திருடின கள்ளனைப் போல முழிக்கிறிரே! நீ யார்? இந்தக் கிழவிகள் எல்லாம் யார்? இவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு இங்கே என்ன அலுவலாக வந்தீர்? சட்டென்று சொல்லும் இல்லாவிட்டால் டோம் வெளியே. துரை உள்ளே இருக்கிறார்; எழுந்து வெளியே வருகிற சமயம்; யாரும் எதிரில் நிற்கக் கூடாது” என்று கூறினான்.

அதைக் கேட்ட சிவஞான முதலியாருக்கு அப்போதுதான் பேசுவதற்கு வல்லமை ஏற்பட்டது. அவர் ஜெவான்களை நோக்கி மிகவும் தணிவான குரலில் பேசத் தொடங்கி, “அப்பா நாங்கள் இன்னார் என்று சொன்னால் உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ. சற்று நேரத்துக்கு முன் தேனாம்பேட்டை டிவிஷன் இன்ஸ்பெக்டர் மோட்டார் வண்டியில் வந்தாரே; அவர் இங்கே வந்தாரா?” என்றார்.

ஜெவான், “அவர் ஏன் இங்கே வருகிறார்? அவர் ரிஷபவாகனத் திருவிழாவுக்காகப் போகிறதாகச் சொல்லிவிட்டுக் காலையிலேயே மைலாப்பூருக்குப் போய்விட்டாரே. அவர் இப்போது இங்கே வரக் காரணமில்லையே!” என்று வியப்பாகக் கூறினான்.

சிவஞான முதலியார், “இல்லையப்பா அவர் ஓர் அவசரமான காரியமாக இப்போது இங்கே வந்தார். பெரிய மனிதர் வீட்டு ஜனங்கள் சிலரை மோட்டார் வண்டியில் வைத்து அழைத்துக் கொண்டு இப்போது தான் அவர் இங்கே வந்தார். அந்த ஜனங்களுக்கு ஏற்படப் போகும் ஒர் ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக, கமிஷனர் துரை அவர்களை இங்கே அழைத்துக் கொண்டு வரச் சொன்னாராம். அவர் இப்போது தான் வந்தார். பத்து நிமிஷ நேரங்கூட ஆகியிராது” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/320&oldid=646233" இலிருந்து மீள்விக்கப்பட்டது