பக்கம்:மதன கல்யாணி-2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 317

ஜெவான், “பகல் பன்னிரண்டு மணி முதல் நான் இவ்விடத்தி லேயே இருக்கிறேன். அவர் இங்கே வரவில்லை. அவர் வேறே எங்கே போனாரோ தெரியவில்லை” என்றான்.

சிவஞான முதலியார் தலையைச் சொரிந்து கொண்டு சிறிது நேரம் தயங்கி, “கமிஷனர் துரையின் ஜாகையான அடுத்த பங்களாவிலே அவர்களை இறக்கி வைப்பதாக அந்த இன்ஸ்பெக்டர் சொன்னார்; ஒருவேளை மோட்டார் வண்டியோடு அங்கே போயிருப்பாரோ?” என்றார். அதைக் கேட்ட ஜெவான்கள் இருவரும் பெரிதும் திகைப்பும் வியப்பும் அடைந்து புரளியாகக் கலகலவென்று நகைத்தனர். அது வரையில் அங்கே நடந்த சம்பாஷணையைக் கவனித்துக் கொண்டிருந்த குமாஸ்தாக்களுள் ஒருவர், சிவஞான முதலியாரது தோற்றத்திலிருந்து, அவர் யாரோதக்க பெரிய மனிதர் என்று யூகித்துக் கொண்டு, தமது நாற்காலியை விட்டெழுந்து வந்து, “ஐயா! உங்களுக்கு என்ன வேண்டும்? தேனாம்பேட்டை யைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் இன்று காலை முதல் இங்கே வரவே இல்லை. இந்தக் கக்சேரிக்கு அடுத்த பங்களாவானது கமிஷனர் துரையின் ஜாகை என்று யாரோ சொன்னதாகச் சொல்லுகிறீர்களே! அப்படி யார் உங்களுக்குச் சொன்னது?” என்றார். •.

சிவஞான முதலியார் மிகுந்த குழப்பமும் கலக்கமும் அடைந்து, “அந்த இன்ஸ்பெக்டர் தான் சொன்னார். ஆனால், போலீஸ் கமிஷனர் அதில் இருப்பதில்லை என்றும், அவர் ஏகாங்கி ஆகையால் மதராஸ் கிளப்பில் இருக்கிறார் என்றும் அந்த இன்ஸ்பெக்டர் சொன்னார்” என்றார்.

அந்த வரலாற்றைக் கேட்ட குமாஸ்தா முன்னிலும் அதிக வியப் படைந்து, “நீங்கள் சொல்வதெல்லாம் புதிய சங்கதியாக இருக் கிறதே! இந்தக் கமிஷனர் துரை சேத்துப்பட்டில் ஒரு பங்களாவில் இருக்கிறார். இந்தக் கச்சேரிக்குப் பக்கத்தில் உள்ள பங்கள ஒரு செட்டியாருக்குச் சொந்தமானது; அதில் அந்தச் செட்டியாரே குடும்ப சமேதராக இருந்து வருகிறார். இந்த மாதிரியான தப்பு சங்கதிகளை எல்லாம் உங்களுக்கு எந்த இன்ஸ் பெக்டர் சொன்னார்” என்று கேட்டார். -

உடனே சிவஞான முதலியாரது மனதில் பெருத்த குழப்பமும், திகிலும் உண்டாயின; தாம் காண்டது. கனவோ நன்வோ என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/321&oldid=646235" இலிருந்து மீள்விக்கப்பட்டது