பக்கம்:மதன கல்யாணி-2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 மதன கல்யாணி

ஐயமுதித்தது. இரண்டொரு நிமிஷ நேரம் அவர் தமது தலையைச் சொரிந்து கொண்டு நின்றவராய், “இந்த விவரங்களை எல்லா, அந்தத் தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர்தான் சொன்னார்” என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறினார்.

அதைக்கேட்ட குமாஸ்தா மிகுந்த ஆச்சரியமடைந்து பக்கத்தி லிருந்த ஜெவான்களைப் பார்த்து, “என்னடா இது தேனாம் பேட்டை இன்ஸ்பெக்டர் மிச்சல் துரை இல்லாத மூட்டை எல்லாம் விட்டுக் கொண்டு திரிகிறான் போலிருக்கிறதே. அவன் எல்லாரிடத் திலும் இப்படி ஒன்றுகிடக்க ஒன்றாகப் புளுகிக் கொண்டே திரிகிறானே” என்றார். -

அதைக் கேட்ட சிவஞான முதலியார் திடுக்கிட்டு நடுநடுங்கி, “என்ன! என்ன! தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டருடைய பெயர் என்ன? இப்போது வேலை பார்க்கிறவருடைய பெயரைச் சொல் லுங்கள்” என்றார். - - -

குமாஸ்தா அலட்சியமாக, “இப்போது அந்த டிவிஷனில் வேலை பார்க்கிற இன்ஸ்பெக்டருடைய பெயர் மிச்சல் துரை; அவன் ஒரு பறங்கிக்கார துரை; அவன் இரண்டு வருஷகாலமாக அந்த டிவிஷனிலே தான் இருக்கிறான். இந்த நிமிஷத்தில்கூட அவன் அங்கே தான் இன்ஸ்பெக்டராக இருக்கிறான். உங்களிடத் தில் சொன்னது அந்த மிச்சல் துரைதானே?” என்றார்.

சிவஞான முதலியார் சகிக்க மாட்டாத வேதனையும் கலவரமும் அடைந்து, என்ன மறுமொழி சொல்வதென்பதை உணராமல் சிறிது நேரம் தயங்கி நின்றவராய், “அப்படியானால் குலாம்ராவுத்தர் என்பவர் இப்போது எந்த டிவிஷனில் வேலை பார்க்கிறார்” என்றார். -

அதைக் கேட்ட குமாஸ்தா கரைகடந்த வியப்பும் திகைப்பும் அடைந்து, “யாரது? குலாம்ராவுத்தரா? அது யாரப்பா அது? குலாம் ராவுத்தர் என்ற பெயருடைய இன்ஸ்பெக்டர் இந்த ஜில்லாவி, லேயே இல்லையே! அவர் சொன்ன பெயரை நன்றாக ஞாபகப் படுத்திச் சொல்லும்” என்றார்.

சிவஞான முதலியார் நெருப்பின் மேல் நிற்பவர் போலத் தவித்த வராய், நீங்கள் சொல்வது நிஜந்தானா? அந்தப் பெயருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/322&oldid=646237" இலிருந்து மீள்விக்கப்பட்டது