பக்கம்:மதன கல்யாணி-2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 319 இன்ஸ்பெக்டரே சென்னப்பட்டணத்தில் இல்லையா? அப்படி யானால், அந்தப் பெயருடைய சப் இன்ஸ்பெக்டர் யாராவது இருக்கிறாரா?” என்றார்.

குமாஸ்தா, “அந்தப் பெயருடைய இன்ஸ்பெக்டருமில்லை; சப் இன்ஸ்பெக்டருமில்லை; இது நிச்சயமான சங்கதி; போலீஸ் சிப்பந்திகளுக்கெல்லாம் மாசாமாசம் சம்பளப்பட்டி தயாரிக்கிறவன் நான்தான்; ஆகையால் நீங்கள் இதை நிச்சயமாக நம்பலாம்” என்றார்.

அதைக் கேட்ட சிவஞான முதலியாரது மனநிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை வார்த்தைகளினால் விவரிப்பது சாத்திய மில்லாத காரியம்; தாங்கள் அன்று முழுதும் ஏதோ பெருத்த படு மோசத்திற்காளாகி ஏமாறிப் போய்விட்டோம் என்ற நினைவு உண்டாகி விட்டது. உடனே அவரது மனதில் கோடாதுகோடி எண்ணங்களும் யூகங்களும் கவலைகளும் அச்சமும் தோன்றி அவரது மனதை நரகவேதனைக் குள்ளாக்கின. அவரது தேகமோ என்ன செய்வதென்பதை உணர மாட்டாமல் பதறிப் பதைத்துக் கொண்டிருந்தது; கைகால்கள் எல்லாம் வெடவெடவென நடுங்கு கின்றன. இன்னொரு முறை ஸ்நானம் செய்தது போல, அவரது உடம்பில் வியர்வை குபிரென்று வெளிப்பட்டு தாரைதாரையாக வழிந்தது. நக்ஷத்திரத் தரகன் என்று கையெழுத்திட்டுக் கல்யாணி யம்மாளுக்குக் கடிதம் அனுப்பிய மனிதனே அவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் போல வந்து தங்களை எல்லாம் அவ்வளவு தந்திரமாக ஏமாற்றிவிட்டுப் பெண்ணைக் கொண்டு போய் விட்டான் என்ற உறுதி ஏற்பட்டது. முதல் நாள் அவனால் எழுதப் பட்ட கடிதம் மறுநாள் கல்யாணியம்மாளிடம் போய்ச் சேரும் என்பதையும், அவர்கள் உடனே போலீசாரை அழைக்கப் போவார்கள் என்பதையும் யூகித்துக் கொண்டு, அவன் இன்ஸ் பெக்டர் போல வந்து பங்களாவிற்குச் சமீபத்தில் நின்று கொண்டிருந்து காரியத்தை மகா சாமர்த்தியமாக நிறைவேற்றிக் கொண்டு போயிருக்கிறாள் என்பதும் தெளிவுபட்டது. அப்படி யானால், ஜெவான்களாக வந்தவர்கள் யார்? அவர்கள் அணிந் திருந்த உடுப்புகள் கத்திகள் துப்பாக்கிகள் முதலியவைகள் எப்படி அவனுக்குக் கிடைத்தன? அவனுடைய மனிஷியான ராஜாயியை அவன் அவ்வளவு தூரம் வருத்தி வற்புறுத்தி, அவள் ராஜாயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/323&oldid=646239" இலிருந்து மீள்விக்கப்பட்டது