பக்கம்:மதன கல்யாணி-2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 மதன் கல்யாணி

என்பதை எல்லோரும் அறிய வெளியிட்டதன் காரணம் என், கடைசியாக பெண்களையும், கல்யாணியம்மாளையும், தாதிகளையும் வண்டியில் வைத்துக் கொண்டு வந்தபோது பங்களாவின் வெளியில் மரங்களில் மறைந்திருந்து துரத்திய ஆள்கள் யார்? அவர்கள் உண்மையில் பெண்னை அபகரித்துப் போக வந்திருந்த ஆள்களாக இருந்தால், வாசலின் இரண்டு பக்கங்களிலும் இருந்து வண்டிகளை வளைத்துக் கொண்டிருப் பார்களேயன்றி ஒரே பக்கத்தில் மறைந்திருந்த காரணமென்ன? என்ற எண்ணிறந்த கேள்விகளும் சமாதானங்களும் அவரது மனதில் எழுந்து எழுந்து மின்னல் தோன்றித் தோன்றி மறைவது போல மறைந்து கொண்டிருந்தன. மூத்த பெண்ணாகிய ஒருத்தியை அவன் அபகரித்துப் போகாமல் தடுப்பதற்காக: தாமும் ஏராளமான அத்தனை ஜனங்களும் காலை முதல் பெரும்பாடு பட்டு முயன்றிருந்தும், ஒரே ஒரு மனிதனான அவன் மூத்த பெண்ணோடு சின்னப் பெண்ணையும் அவர்களது தாயையும் கொண்டு போனது அவரால் தாங்க முடியாத மகா ஆச்சரியமான சங்கதியாக இருந்தது. ஆகவே, தாம் அப்போது என்ன செய்வது? அந்த மனிதனைத் தேடுவதா? அப்படியானால், எங்கே போய்த் தேடுவது? அல்லது, தாம் ஏமாறிய விவரங்களை எல்லாம் உடனே போலீஸ் கமிஷனரிடத்தில் சொல்லுவதா? அல்லது, பங்களாவுக்குத் திரும்பிப் போய், ஒன்பது மணி வரையில் ஒரு பக்கத்தில் மறைந்திருந்து, எதிரியின் ஆள்கள் வந்து ஏதாவது கலகம் செய்கிறார்களா என்பதையும் அறிந்து கொண்டு, வந்து புகார் செய்வதா? என்பன போன்ற கேள்விகளில் சிவஞான முதலியார் அழுந்திப் போய்ப் பேச்சுமூச்சின்றி சித்திரப் பதுமை போல ஸ்தம்பித்து அப்படியே நின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/324&oldid=646240" இலிருந்து மீள்விக்கப்பட்டது