பக்கம்:மதன கல்யாணி-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 29

கோபம் போலிருக்கிறது. மறுபடியும் நாளைக்கு முகூர்த்தம் வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இன்னம் ஒரு வருஷம் கழித்தே கலியாணம் செய்து வைப்பதாக இதுவரையில் சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது என்ன அவசரம் வந்துவிட்டதோ தெரியவில்லை. நானும் பாலாம்பாளும் சந்தோஷமாக இருப்பதற்கு இடைஞ்சலாக, நான் இப்போது நிச்சய தாம்பூலம், கலியாணம் முதலிய எதையும் செய்து கொள்ளப் போகிறதில்லை. முன் ஏற்பாட்டின்படி இன்னம் ஒரு வருஷகாலம் கழித்துத் தான் கலியாணம் செய்து கொள்ளுவேன் என்று அவர்களிடத்தில் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆகையால் நான் பார்க் பேருக்கு அவர்களை அழைத்துப் போக மாட்டேன். வேண்டுமானால் அவள்களே போகட்டும். அவர்களுக்கு வழி தெரியாதோ வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அழைத்துக் கொண்டு போட்டும்; இன்றைக்கு நீயும் நானும் போய்விட்டு வருவோம் வா - என்றான்.

அதைக் கேட்ட துரைராஜா மைனரைக் கபடமாகப் பார்த்துப் புன்னகை செய்து, “நீயும் நானும் போவதில் என்ன சுகமிருக்கிறது. எங்கே போனாலும் ஆணும் பெண்ணுமாகப் போனால் தான் இன்பமாய் இருக்கும்” என்று கூறி தனது கண்ணைச் சிமிட்டினான்.

அதைக் கண்ட மைனர், “அப்படியானால், நீ சொல்வதில் ஏதோ சூக்ஷமைமிருக்கிறது. நீ திருடனல்லவா! யாராவது ஆசாமியை வரும்படி சொல்லி இருந்தாலும் இருப்பாய். அப்படி இருந்தால் நிஜத்தைச் சொல்லிவிடு. நான் தனியாகவாவது போகிறேன்” என்றான்.

அதைக் கேட்ட துரைராஜா முன்னிலும் அதிகமான புன்னகை யும் மகிழ்ச்சியும் காட்டி சிறிது தயங்கி, “நான் யாரையும் வரும்படி சொல்லவில்லை. என்னையே ஒருத்தி வரச்சொல்லுகிறாள். என் அதிர்ஷ்டம், நான் சும்மா இருந்தாலும், ஊரிலிருக்கும் பெண் பிள்ளைகள் என்னைச் சும்மா இருக்க விடுகிறதில்லை. இதோ இந்தக் கடிதத்தைப் படித்துப் பார். உனக்கு பாலாம்பாள் அகப் பட்டால், எனக்கு மாத்திரம் எவளும் கிடைக்கமாட்டாள் என்று எண்ணிக் கொண்டாயோ?” என்று கூறிய வண்ணம் தனது சட்டைப் பையில் இருந்த ஒரு கடிதத்தை எடுத்து மைனரிடத்தில் கொடுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/33&oldid=646244" இலிருந்து மீள்விக்கப்பட்டது