பக்கம்:மதன கல்யாணி-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மதன கல்யாணி

-என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படிக்கவே, மைனர் பெரிதும் வியப்பும் திகைப்பும் அடைந்து அதை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தான். அது உண்மையில் ஒரு பெண் பிள்ளையின் எழுத்தைப் போலவே இருந்ததாயினும், அதை எவரும் கண்டு கொள்ளாவிதம் அவள் தனது இயற்கை யான எழுத்தை வேறுவிதமாக மாற்றி மறைத்து எழுதி இருந்ததாகக் காணப்பட்டது. மைனர் கடிதத்தை துரைராஜாவிடத்தில் கொடுத்து விட்டு, அதோடு வந்திருந்த வைரப்பதக்கத்தை வாங்கிப் பார்த்தான். நீரோட்டம் ஜிலுஜிலென்று ஜ்வலிக்கும் விலை உயர்ந்த வைரங்கள் நிறைந்த அந்தப் பதக்கம் சுமார் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பெறக்கூடியதாகக் காணப்பட்டது. அதைக் காணவே, அந்தக் கடிதம் எழுதியவள், உண்மையாகவே எழுதி இருக்கிறாள் என்பதும், புரளிக்காக எழுதவில்லை என்பதும் நிச்சயமாகத் தெரிந்தது.

உடனே மைனர் துரைராஜாவை நோக்கி, “பேஷ்! நீ நல்ல அதிர்ஷ்டசாலிதான். பெண்கள் இப்படிக் கிடைப்பதல்லவா உண்மையான இன்பம். நாம் போய் குட்டிச்சுவர் ஏறிக்குதித்து பல வகையில் அவஸ்தைப்பட்டு பெண்களுடைய சிநேகத்தை அடைவதில் என்ன சுகமிருக்கிறது. அவர்களே நம்மிடத்தில் மோகங் கொண்டு இந்தப் பெண்ணைப் போல வர வேண்டும். அதிருக்கட்டும்; இவள் யார் என்பது உனக்குக் கொஞ்சமாகிலும் தெரிந்ததா?” என்றான்.

துரைராஜா. எப்படித் தெரியப் போகிறது. இந்தக் கடிதத்தி லிருந்து நீ எவ்வளவு சங்கதி தெரிந்து கொண்டாயோ அவ்வளவே நானும் தெரிந்து கொண்டேன். இன்று காலையில் ஒரு வேலைக் காரன் வந்து என்னைக் கூப்பிட்டு, இந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டுப் போனான். அவனை நான் யார் என்று கேட்பதற்குள், அவன் போய்விட்டான். அதைப் பிரித்துப் பார்க் கிறேன். உள்ளே, கடிதம் பதக்கம் நோட்டு எல்லாம் இருக்கின்றன. அவள் உண்மையில் யெளவன ஸ்திரியோ, வயசானவளோ, அழகுள்ளவளோ, குரூபியோ, குட்டையோ, நெட்டையோ? உனக்கு எவ்வளவு சங்கதி தெரிகிறதோ அவ்வளவே எனக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/36&oldid=646249" இலிருந்து மீள்விக்கப்பட்டது