பக்கம்:மதன கல்யாணி-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 33

தெரிகிறது. தான் அபாரமான அழகுள்ளவளென்றும், யெளவனப் பருவத்தினளென்றும் அவளே எழுதி இருப்பதிலிருந்து, உண்மையில் அவள் அப்படியே இருப்பாள் என்று நாம் நினைக்கக்கூடாது.

மைனர்:- ஏன் நினைக்கக்கூடாது? இப்போது வெள்ளைக்காரி வேஷம் போட்டுக்கொண்டு தன்னுடைய மேனியை மறைத்துக் கொண்டு வருவதனாலேயே, அவள் எப்போதும் தன் இயற்கைத் தோற்றத்தை மறைத்து உன்னை ஏமாற்ற முடியுமா? பொய் சொல்லி, உன்னுடைய நிரந்தரமான பிரியத்தைச் சம்பாதித்துக் கொள்ள முடியாதென்பது அவளுக்குத் தெரியாதென்று பார்த்தாயா? அவள் எழுதியிருப்பதில் கொஞ்சமும் தவறிருக்காது. அவள் உண்மையிலேயே அபூர்வமான கட்டழகைக் கொண்ட சுந்தரவதியாகத் தான் இருப்பாள். அதைப்பற்றி சந்தேகமே இல்லை. உன்னுடைய அபாரமான செலவுகளுக்கும் அவள் பெருத்த பணத் தொகைகளைக் கொடுக்கக்கூடியவளாகத் தான் இருக்கிறாள். இந்தக் காரியம் பலித்துவிட்டால், நீ இனிமேல் மோகனாங்கியைத் தேடி அலைய வேண்டியதே இல்லை.

துரைராஜா:- இன்று ராத்திரி வரப்போகிறவள் எவ்வளவு அற்புத மான அழகு வாய்ந்தவளாக இருந்தாலும், மோகனாங்கியின் அழகுக்கு இணை வரமாட்டாள். இதையும் பார்ப்போம்: அதையும் பார்ப்போம். இதில் நஷ்டமென்ன. உலகத்திலுள்ள எப்படிப்பட்ட அழகான பெண்ணையும் நாம் வசியப்படுத்தியே தீரவேண்டும் என்பது என்னுடைய கொள்கை.

மைனர்:- சரி; உன்னிஷ்டப்படியே செய். ஆனால், அவள் ராத்திரி ஒன்பது மணிக்கல்லவா வரப்போகிறாள். சாயுங்காலம் 5-மணி முதல் 9-மணி வரையில், அதற்காக நீ தனியாக இருந்து தபசு பண்ணப் போகிறாயா? அதுவரையில் நாம் இருவரும் சேர்ந்து போய் வேடிக்கை பார்ப்போம்.

துரைராஜா. அதற்கென்ன; அப்படியே செய்வோம். நான் இப்போது வெள்ளைக்காரர் கம்பெனிக்குப் போய் முக்கியமாக ஒரு தொப்பி வாங்க வேண்டும். மற்ற உடைகள் எல்லாம், என்னிடத்தில் இருப்பவைகளே போதும் - என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/37&oldid=646251" இலிருந்து மீள்விக்கப்பட்டது