பக்கம்:மதன கல்யாணி-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மதன கல்யாணி

- 2 - 4. o மைனர்:- “சரி; அப்படியானால் புறப்படு; போவோம் எனறான.

உடனே துரைராஜா எழுந்து தொப்பியைத் தவிர, மற்ற உடை களை எல்லாம் தரித்து, மைனரையும் அழைத்துக் கொண்டு வெளிப்பட்டான். அவர்கள் இருவரும் பல இடங்களுக்குப் போய் அலைந்துவிட்டு, மாலை ஏழு மணிக்கு பார்க்குச் GT அடைந்து, டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டு, கண்காட்சிகள் நிறைந்திருந்த அடைப்புக்குள் நுழைந்தனர். அதற்குள் அந்த அடைப்பிற்குள் லட்சக்கணக்கில் ஜனங்கள் வந்து நிறைந்திருந் தனர். கனவான்களும் சீமாட்டிகளும் அழகான ஆடையாபரணங் களை அணிந்து எங்கும் ஒரே கும்பலாக நின்றிருந்தனர். பாண்டு வாத்தியங்கள் ஒரு புறத்தில் முழங்கின. ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொரு விதமான காட்சி இருந்து கண்ணைக் கவர்ந்தது. நாடகக் கொட்டகைகளும், தாசிகளின் கோலாட்டங்களும், சூதாட்டங் களும், காப்பிக் கடைகளும், மற்றும் பலவகையான வேடிக்கை களும் ஏராளமாக நிறைந்து மனிதரது மனதைப் பலவகையில் மயக்கி சின்னாபின்னம் ஆக்கின. அன்று இரவு போஜனத்தை முடித்துக் கொண்டு வந்து, இரவு முழுதும் அவ்விடத்திலேயே சுற்றி அலைந்து, தரையிலோ வேறு எந்த மூலையிலோ படுத்திருந்து மறுநாட் காலையில் போகும் தீர்மானத்தோடு வந்திருந்தோரே பெரும்பாலோர். நமது மைனரும், துரைராஜாவும் பணத்தை வாரி ஏராளமாகச் செலவு செய்து, ஒவ்வொரு வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டும், சிற்றுண்டி காப்பி முதலிய உணவுகளை இடையிடையே புசித்துக்கொண்டும், சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். எங்கும் மின்சார விளக்குகள் டால் வீசிக் கொண்டிருந்தன. நாழிகை ஏற ஏற சென்னையில் உள்ள பரத்தையர் யாவரும் முகத்தில் மாவைத் தடிவி, போலி ஆபரணங்களையும் தாம்பூலங்களையும் அணிந்து,

“மாணினம் வருவ போன்றும் மயிலினம் திரிவ போன்றும்

மீனினம் மிளிர்வ போன்றும் மின்னினம் மிடைவ போன்றும் தேனினம் சிலம்பி யார்ப்ப சிலம்பினம் புலம்ப எங்கும் பூதனை கூந்தல் மாதர் பொம்பெனப் புகுந்து மொய்த்தார்.” என்றபடி, வந்து கும்பலில் கலந்து கொண்டு மின்சார விளக்கடி களில் நின்று, தமது கண்ணடிகளினாலும் குலுக்கு பிலுக்குகளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/38&oldid=646253" இலிருந்து மீள்விக்கப்பட்டது