பக்கம்:மதன கல்யாணி-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மதன கல்யாணி

சோலைக்குள் போவோம் என்று கையால் சைகை செய்து முதலில் நடக்க, துரைராஜாவும் கூடவே தொடர்ந்து சென்றான். பிறர் எவரும் தம்மைக் கண்டு சந்தேகியாத படி, அவர்கள் இருவரும் புருஷன் பெண்ஜாதிகளைப் போல நடித்து ஜனக்கும்பலை எல்லாம் கடந்து, கண்காட்சிகளிருந்த அடப்பை விட்டு வெளியில் வந்து, வடக்குப் பக்கத்தில் அடர்ந்திருந்த பூஞ்சோலைக்குள் நுழைந்தனர்.

அந்தச் சோலையில் ஆங்காங்கு மின்சார விளக்குகள் நிறைந்து பிரகாசம் கொடுத்துக் கொண்டிருந்தன. பூந்தொட்டிகளுக்கும் மரங்களுக்கும் இடையிடையில் பெஞ்சுப் பலகைகள் போடப் பட்டிருந்தன. மூலை முடுக்குகளிலெல்லாம் ஆண்பாலாரும், பெண்பாலாரும் உட்கார்ந்திருந்தனர். துரைராஜாவும், போலி வெள்ளைக்காரப் பெண்ணும் நெடுந்துரத்துக்கப்பால் சென்று, எவரும் காணப்படாமல் நிருமானுஷ்யமாய் இருந்த ஒரு மூலையை அடைந்து, அவ்விடத்தில் கிடந்த ஒரு பெஞ்சுப் பலகையில் உட்கார்ந்து கொண்டனர். அவ்விருவரும் வெளிப்பார் வைக்குப் புருஷன் பெண்ஜாதிகளைப் போலக் காணப்பட்டமை யால், ஜனங்களாயினும் போலீஸாராயினும் அவர்களைப் பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ளவில்லை. ஏனெனில், அவர்களைப் போல எத்தனையோ துரைகளும் துரைஸானிகளும், இந்திய புருஷரும் ஸ்திரீகளும், ஜதை ஜதையாக எங்கும் காணப்பட்டமை யால், இவ்விருவர் சென்றதில் அசாதாரணமான விஷயம் எதுவும் தோன்றவில்லை. மைனர், துரைராஜாவை விட்டு, அப்பால் போய் விட்டான் ஆயினும், அவர்கள் ஒன்றுகூடி சோலைக்குள் போன போது, அவன் ஜனக் கும்பலுக்குள் நுழைந்து வந்து, அந்தப் போலி வெள்ளைக்கார மடந்தையின் பின்புறத்தில் நெருங்கி, அவளது அற்புதமான அழகு யெளவனம் பருவம் முதலிய சிறப்பு களைக் கண்டு நெடுமூச்செறிந்து, துரைராஜாவின் அதிர்ஷ்டத்தைக் குறித்து ஒருவாறு பொறாமை கொண்டு தவித்திருந்தான். அந்தப் பெண் மயிலின் வதனம் நன்றாக மூடப்பட்டிருந்ததாயினும், விசாலமான அழகிய கண்கள் இரண்டை மாத்திரம் நன்றாகக் கண்ட துரைராஜா, அப்படிப்பட்ட சுந்தர விழிகளைக் கொண்ட முகம், எவ்வளவு சொகுசாக இருக்குமோ என்று நினைத்து அளவளாவி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/40&oldid=646258" இலிருந்து மீள்விக்கப்பட்டது