பக்கம்:மதன கல்யாணி-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 33

விகாரமானதாக இருக்குமோ என்று நீர் சந்தேகிக்கலாம். அப்படிப் பட்ட சந்தேகமே கொள்ள வேண்ட்ாம். நீர் பெண்பிள்ளை விஷயத்தில் மகா நாகரீகமான மனிதர் என்றும், சுலபத்தில் குற்றங் கண்டு பிடிக்கக் கூடியவர் என்றும் நான் அறிவேன். என்னுடைய முகம் உம்முடைய மனசுக்குப் பிடிக்காததாக இருந்தால் நீர் என்மேல் நீடித்த பிரியம் வைக்கமாட்டீர் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது நான் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தால், எப்போதும் முகத்தை மறைத்து வைத்துக் கொண்டே உம்மை ஏமாற்ற முடியாதல்லவா? ஆகையால் முகம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் உமக்குத் தேவையில்லை. இப்படிப்பட்ட அழகான முகத்தை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை என்று நீரே ஒப்புக்கொள்வீர் என்பதை நான் உறுதியாகச் சொல்லுகிறேன்” என்றாள்.

அதைக் கேட்ட துரைராஜா கரைகடந்த மகிழ்ச்சி அடைந்து அதற்கு என்ன மறுமொழி கூறுவதென்பதை அறியாதவனாய் சிறிது நேரம் தயங்கினான்.

உடனே அந்தப் பெண்பாவை, “நான் பணத்துக்கு ஆசைப் பட்டவளே அல்ல. எனக்கு லட்சக்கணக்கில் சொத்துகள் இருக்கின்றன. கண்ட புருஷர் மேலும் நான் ஆசை வைக்கக்கூடிய வேசியல்ல. யெளவனப் பருவமும், மனசாலும் வாக்காலும் செய்கையாலும் கொஞ்சமும் கெடாத கற்பும், அபூர்வமான அழகும் என்னிடத்தில் இருந்தும், நான் ஆசைப்படும் இந்தப் புருஷனைத்தான் அடைய வேண்டும் என்ற அந்த ஒரு பிடிவாத குணம் மாத்திரம் என்னிடத்தில் இருக்கிறது. இப்போது நான் என்னுடைய உறவினருக்குள் அடங்கினவளாக இருக்கிறேன். அவர்கள் என்னை வேறொரு புருஷனுக்குக் கட்டிக்கொடுக்க உத்தேசித்திருக்கிறார்கள். அவர்கள் என்னை உமக்குக் கட்டிக் கொடுக்கப் பிரியப்படவில்லை. அவர்கள் செய்யப்போகும் கலியாணத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். நான் இன்னமும் சொற்பகாலம் அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டியவளாக இருக்கிறேன். அதுவரையில் நாம் இப்படித்தான் ரகசியமாகச் சந்தித்து சந்தோஷப்பட வேண்டும்; இன்னம் சொற்பகாலத்தில், நானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/43&oldid=646265" இலிருந்து மீள்விக்கப்பட்டது