பக்கம்:மதன கல்யாணி-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மதன கல்யாணி

என்னுடைய சமஸ்தானத்துக்கு எஜமானியாவேன்; அப்போது உம்மையே கலியாணம் செய்து கொண்டு விடுகிறேன். அதுவரையில் ரகசியமாக என்னுடைய சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி நான் வரச் சொல்லும் இடத்துக்கு நீர் வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். இந்தக் காரியம் உமக்குக் கொஞ்சம் துன்பகரமானதாகத்தான் இருக்கும். இருந்தாலும், தன்னுடைய உயிரையே உம்முடைய பொருட்டு தத்தம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு பெண்ணை உத்தேசித்து, நீர் இந்தத் துன்பங்களை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டீர் என்று நினைத்து இவ்வளவு துரம் துணிந்து உமக்கு எழுதி இந்த வேஷத்தோடு இவ்வளவு துரம் வந்தேன். இதிலிருந்தே என்னுடைய பிரியமும் உறுதியும் எவ்வளவு அதிகமாக இருக்கிறதென்பதை யூகித்துக் கொள்ளலாம். உம்முடைய பிரியத்தை எல்லாம் என்மேல் வைப்பீரா? இன்னம் சொற்பகாலம் வரையில், அதாவது ஒரு வருஷ காலம் வரையில், ரகசியத்தில் நான் செல்லும் இடங்களுக்கு வந்து என்னைச் சந்தோஷிப்பித்துப் போவீரா? இது நான் உள்ள வரையில் நீர் உள்ளவரையில் நீடித்து நிற்க வேண்டும். நான் என் சமஸ் தானத்துக்கு எஜமானியான உடனே நீர் என்னைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும். சொற்ப காலம் வந்து விட்டு, அவ்வளவோடு திருப்தி அடைந்து, என்னை வஞ்சித்துவிடக் கூடாது. இந்த ஏற்பாட்டுக்கு நீர் சம்மதப்படுகிறீரா? உம்மை நான் என்னுடைய ஜீவாதாரமாக மதிக்கலாமா? தயவு செய்து உண்மையாகப் பேச வேண்டும்” என்று மிகவும் உருக்கமாகவும் வாத்சல்யத்தோடும் கூறினாள்.

அதைக் கேட்ட துரைராஜா கடைகடந்த களிப்பும், சகிக்க ஒண்ணாத ஆனந்தமும் அடைந்தவனாய் அவளை நோக்கி, “என் மேல் இவ்வளவு பிரியம் வைத்து எத்தனையோ துன்பங்களையும் மதியாமல், என்னையே அடைய வேண்டும் என்ற அந்த ஒரே உறுதியை வைத்திருக்கும் பெண்மணியை அடைந்து சுகப் படுவதைவிட இந்த உலகத்தில் மனிதன் அடையக்கூடிய பேரானந்தம் வேறு இருக்கிறதா? அழகு யெளவனம் பிரியம் ஏராளமான செல்வம் முதலிய சகலமான சம்பத்தையும் பாக்கியத் தையும் பரிபூரணமாகக் கொடுக்கக் காத்திருக்கும் ரீதேவியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/44&oldid=646266" இலிருந்து மீள்விக்கப்பட்டது