பக்கம்:மதன கல்யாணி-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 41

உன்னை அடைய நான் எவ்வளவோ நல்ல பூஜை செய்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். கரும்பு தின்னக் கூலி கேட்பாருண்டோ? இந்த விஷயத்தில் நீ சந்தேகங்கூடக் கொள்ள வேண்டுமா? இந்த நிமிஷம் முதல் நான் உன்னுடைய அடிமை என்றே நீ மதித்துக் கொள்ளலாம். நீ என்னுடைய உயிரையே கேட்டாலும் அதை இதே நிமிஷத்தில் எடுத்து உன் பாதத்தடியில் வைத்து விடுகிறேன். இனி உன்னை சந்தோஷமாக வைப்பதே நான் ஜென்மம் எடுத்ததன் பலன் என்று மதித்துக் கொண்டு, ஒரு நிமிஷமும் உன் மனம் கோணாதபடி நடந்து கொள்ளுவேன். நீ உன்னுடைய சமஸ்தானத்துக்கு எஜமானியாகிற வரையில் உன்னுடைய பிரியப்படியே, நாம் ரகசியமாக சந்தித்து வருவோம். இனி எந்த விஷயத்திலும் உன்னுடைய நோக்கம் போலவே நான் நடந்து கொள்ளுவேன் என்பதை நீ பிரமாணமாக எண்ணிக் கொள்ளலாம். கொஞ்ச காலமானவுடன் நான் உன்னைக் கைவிட்டு விடுவேன் என்ற சந்தேகமே உனக்கு வேண்டாம். உன்னுடைய முகத்தைப் பார்க்காமல் இருக்கும் போதே, உன்னுடைய வார்த்தைகளே என் மனசை இளக்கி, தன்னை உனக்கு மாறாத அடிமையாக்கி விட்டன. அப்படியிருக்க, உன்னோடு நெருங்கி, உன்னுடைய அன்பையும் பிரியத்தையும் சுகத்தையும் நான் அடைந்தால், அதன் பிறகு, நம்முடைய பந்தம் அதிக உறுதியான தாகுமே அல்லாது தளராது. நானும் பெருத்த தனிகனல்ல. என்னுடைய பெரிய தகப்பனாருக்குப் பிறகே, நான் கிருஷ்ணா புரத்து ஜெமீந்தாராக வேண்டும். அவருக்கும் எங்களுக்கும் மனதில் அவ்வளவாக பிரியமும் இல்லை. ஆகையால், அவர் தம்முடைய ஆயுசு காலத்துக்குள்ளாகவே எல்லாவற்றையும் அழித்து விடுவார் என்றே நினைக்க வேண்டி யிருக்கிறது; ஆகையால், அதைக் கருதியும், நான் உன்னைக் கட்டிக்கொள்வது, எனக்கு அனுகூலமானதாகவே இருக்கிறது. என் வார்த்தையை நீ உறுதியாக நம்பலாம்” என்று மிக உருக்க மாகவும், வாத்சல்யத்தோடும் கூறினான்.

அதைக் கேட்டு நிரம்பவும் சந்தோஷம் அடைந்தவளைப் போலக் காணப்பட்ட அந்தப் பெண், “சரி; இப்போதே என்னுடைய மனசு குளிர்ந்தது. நீர் ஒருகால் என்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/45&oldid=646268" இலிருந்து மீள்விக்கப்பட்டது