பக்கம்:மதன கல்யாணி-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 43

அதனால் நம் இருவருக்கும் பெருத்த அனுகூலமும் ஏற்படும்” என்றாள்.

உடனே துரைராஜா அவளை நோக்கி, “அது என்ன இடைஞ்சல் என்பதைச் சொன்னால், உடனே விலக்கி வைக்கிறேன். என்னுடைய சாமர்த்தியத்தை அதிலேயே நீர் பார்த்துக் கொள்ளலாம்” என்றான்.

வெள்ளைக்கார துரைஸாணி, “அது ஒன்றும் பெரிய காரியமல்ல; சின்ன விஷயந்தான். இருந்தாலும், அதை நாம் உடனே செய்யா விட்டால் அதனால் நம்முடைய சிநேகத்துக்குப் பெருத்த இடர் வந்து சேரும்; எப்படி என்றால், என்னை வேறொருவனுக்குக் கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று நான் சொன்னேன் அல்லவா. ஆனால் இந்த ஆறுமாச காலமாக நான் உம்மைப் பற்றியே நினைத்து உம்மிடத்திலேயே காதல் கொண்டு உம்மையே அடைய வேண்டுமென்று உறுதி செய்து கொண் டிருக்கிறேன். ஆனால் என்னுடைய கோரிக்கையை எப்படி நிறை வேற்றுகிறதென்றும், உம்மோடு எப்படிப் பேசுகிறதென்றும் யோசனை செய்து செய்து பார்த்தேன். ஒன்றும் தோன்றவில்லை. இந்த விஷயத்தில் எனக்கு யோசனை சொல்லக்கூடிய நம்பிக்கை ‘யான சிநேகிதையும் எனக்கு இல்லை கடைசியாக இந்தக் கலியாணம் மிகவும் நெருங்கிவிட்டதாகையால், அதை யாரிடத்தி லாகிலும் சொல்லிப் பார்ப்போம் என்ற ஒரு பைத்தியக்கார நினைவைக் கொண்டு ஒரு தவறு செய்து விட்டேன். என்னிடத்தில் ஒவ்வொரு நாளும் காலையிலும் சாயுங்காலத்திலும் வந்து ஒருவன் எனக்கு வீணை கற்றுக் கொடுத்து வருகிறான். அவன் என்னிடத்தில் மிகவும் மரியாதையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொண்டிருந்தான். அவனை நான் யோக்கியன் என்று நினைத்து அவனிடத்தில் என்னுடைய ரகசியமான எண்ணத்தை வெளியிட்டேன். இப்போது என் உறவினர் எனக்குப் பார்த்திருக்கும் புருஷன் என் மனசுக்குப் பிடிக்கவில்லை என்றும், உம்மையே கட்டிக் கொள்ளப் பிரியப்படுவதாகவும் அதற்கு என் உறவினர்கள் இணங்கமாட்டார்கள் ஆகையால், ஒரு யோசனை

சொல்லும்படியாக நான் அவனிடம் கேட்டேன். அவன் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/47&oldid=646272" இலிருந்து மீள்விக்கப்பட்டது