பக்கம்:மதன கல்யாணி-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மதன கல்யாணி

செய்தான் என்றால், நான் எதிர்பார்க்காத விதமாகப் பேசத் தொடங்கியதன்றி, அவன் உம்முடைய நடத்தை மிகவும் கெட்டதென்று கூறி உம்மைப் பற்றி நிரம்பவும் இழிவாகப் பேசத் தொடங்கினான். நீர் தாசிகள் வீட்டிலும் வேசைகள் வீட்டிலும் அடிமையாகக் கிடக்கிறீர் என்றும், சூதாடுகிறீர் என்றும், குடிக்கிறீர் என்றும், வீட்டில் உள்ள ஆபரணங்களை எல்லாம் திருடுகிறீர் என்றும் சொல்லி, உலகத்தில் உம்மைவிடக் கேவலமான துஷ்டனும் இழிகுணம் உடையவனும் இருக்க மாட்டான் என்றான்; அவனுடைய வார்த்தையைக் கேட்கவே என் மனசில் பெருத்த விசனமும் கோபமும் உண்டாகி விட்டன. அந்த விஷயத்தை இந்த மனிதனிடத்தில் ஏன் சொன்னோம் என்று ஆகிவிட்டது. இருந்தாலும், அவனுடைய மனசுக்கு விரோதமாக நான் மறுத்துப் பேசினால், அவன் உடனே போய் என்னுடைய உறவினரிடத்தில் இந்தச் சங்கதியை வெளியிட்டு விடுவான் என்ற நினைவினால், நான் அவனோடு அதிகமாக வாதாடவில்லை. நான் அவனைப் பார்த்து, “ஐயா! அப்படியா சங்கதி அந்த மனிதர் இப்பேர்ப்பட்ட துன்மார்க்கர் என்பது எனக்கு இது வரையில் தெரியாது. நான் அவர்மேல் ஆசைப்பட்டது தவறென்பது இப்போது தான் தெரிகிறது. இன்று முதல் என்னுடைய மனசை மாற்றிக் கொள்ளுகிறேன். ஆனால், நீர் இந்த விஷயத்தை என்னுடைய பந்துக்களிடம் சொல்ல வேண்டாம்” என்று மிகவும் நயந்து கேட்டுக் கொண்டேன். அவன் என்ன காரணத்தினாலோ, உம்மிடத்தில் பெருத்த பகைமை பாராட்டிக் கொண்டிருக்கிறான். அவன் உம்மைத் துவித்ததிலிருந்தும், எனக்கு அவன் சொன்ன மறுமொழியில் இருந்தும், அவன் இந்த விஷயத்தை இப்போது வெளியிடா விட்டாலும் பிந்தியாவது என்னுடைய மனிதர் களிடத்தில் வெளியிட்டு விடுவானாகில், என்னுடைய மனிதர்கள், தாங்கள் உத்தேசித்துள்ள கலியாணத்தை உடனே முடித்துவிட ஆரம்பிப்பார்கள். நம்முடைய கருத்து நிறைவேறாமல் போய் விடும். ஆகையால், அந்த மனிதன், இந்தச் சங்கதியை வெளி யிடாமல் இருப்பதற்கு நாம் ஏதாவது தக்க மார்க்கம் செய்துவிட வேண்டும்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/48&oldid=646276" இலிருந்து மீள்விக்கப்பட்டது