பக்கம்:மதன கல்யாணி-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 45

அதைக் கேட்ட துரைராஜா மிகுந்த வியப்பும் திகைப்பும் ஒரு வகையான வெட்கமும் அடைந்து, தன்னைப்பற்றி அவ்வளவு துஷணையாக அவளிடத்தில் எவனோ சொல்லி இருக்கிறானே என்ற கவலையும் விசனமும் கொண்டதன்றி, அப்படிப்பட்ட துஷ்டனை, தான் தக்கபடி தண்டிக்க வேண்டும் என்ற ஒரு வகையான பதைப்பையும் கொண்டவனாய், “ஆகா! அப்படியா! என்னைப் பற்றி அவ்வளவு இழிவாகப் பேசிய அந்தத் துஷ்ட னுடைய பெயரைச் சொல், இன்றைக்கே அவனைக் கொன்று போட்டு விடுகிறேன். இரண்டு வியாதிக்கும் ஒரே மருந்தாகப் போய்விடட்டும்” என்றான்.

அதைக் கேட்ட வெள்ளைக்காரப் பெண், “அவனைக் கொல்வது மாத்திரம் வேண்டாம். ஏனென்றால், அதனால் உமக்கும் எனக்கும் பெருத்த தீராத பாவமும் பழியும் உண்டாவதன்றி, போலீசாரும் உம்மைப் பிடித்து மரண தண்டனைக்கு ஆளாக்கி விடுவார்கள். அதன் பிறகு, உம்மைக் கணவனாக அடைய வேண்டும் என்ற என்னுடைய ஆசையும் நிராசையாகப் போய்விடும். ஆகையால், அவனை நீர் கொல்வதாய் இருந்தால், நான் அவனுடைய பெயரையே உம்மிடத்தில் வெளியிடப் போகிறதில்லை” என்றாள்.

உடனே துரைராஜா, “மெய்தான். நீ சொல்வதும் நியாயமாகத் தான் இருக்கிறது. அவனை நான் கொல்லவில்லை; ஆனால் வேறு எப்படித்தான் அவனுடைய வாயை அடக்குகிறது” என்றான்.

வெள்ளைக்காரப் பெண், “அவன் குறைந்தது ஆறுமாச காலமாவது எங்களுடைய வீட்டுக்கு வராமல் இருந்தால், அதுவே போதுமானது. அதற்குள் எனக்கு வேறொரு வித்துவானை அமர்த்தி விடுவார்கள். இவன் அதன்பிறகு எங்களுடைய மனிதரிடத்தில் பேசும்படியான சந்தர்ப்பமே இல்லாமல் போய் விடும்; அதற்குத் தக்க யோசனை நீர் தான் செய்ய வேண்டும். ஆனால், அவனைக் கொல்வது மாத்திரம் கூடாது” என்றாள்.

துரைராஜா, “சரி, அப்படியே செய்கிறேன்; இதுதானா ஒரு பெரிய காரியம்? அவனை நான் கொல்லுகிறதில்லை. ஆறுமாச காலம் வரையில் அவன் தன்னுடைய வீட்டை விட்டு வெளியில் வராதபடி நான் செய்துவிடுகிறேன். நீ இனிமேல் அவனைப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/49&oldid=646278" இலிருந்து மீள்விக்கப்பட்டது