பக்கம்:மதன கல்யாணி-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மதன கல்யாணி

எவ்விதக் கவலையும் கொள்ள வேண்டாம்” என்று மிகவும் உறுதியாகக் கூறினான். “அவன் இனிமேல் நாளைக்குச் சாயுங்காலம் தான் எங்களுடைய வீட்டுக்கு வருவான். அதற்குள் காரியத்தை நிறைவேற்றி விடவேண்டும்” என்றாள் பெண்.

துரைராஜா, “தடையில்லை. உடனே செய்து முடிக்கிறேன்.

அவனுடைய பெயர் என்ன?” என்றான்.

வெள்ளைக்காரப் பெண், “இவ்வளவு காலமாக அவன் எங்களுடைய வீட்டுக்கு வந்துவிட்டுப் போகிறான். ஆனால் அவனுடைய பெயர் என்ன என்பதை விசாரிக்கவே இல்லை. நான் இப்போது வீட்டுக்குப் போய், நாளைய தினம் காலையில், எங்கள் வீட்டு வேலைக்காரியிடத்தில் கேட்டு அவனுடைய பெயரையும் விலாசத்தையும் அறிந்து, ஒரு கடிதத்தில் அந்த விவரத்தை எழுதி உமக்கு அனுப்பி வைக்கிறேன். நீர் தாமசமின்றி உடனே இதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதான் முதல் பரிட்சை. இதில் தேறினால்தான், நீர் என்மேல் சரியான பிரியம் வைத்திருக்கிறீர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாகும். அதன்மேல் தான், நான் இன்னார் என்பதை உமக்கு வெளி யிடுவேன்; வெளியிடுவது மாத்திரமல்ல; அன்றிரவே உமக்கு நான் பத்தினியாகி, உம்மை இன்பசாகரத்தில் ஆழ்த்துவேன் என்பதையும் நீர் நிச்சயமாக நம்பலாம். எனக்கு நேரமாகிறது; நான் விட்டில் இல்லை என்பதை என்னுடைய ஜனங்கள் கண்டு கொள்வார்கள். நான் உத்தரவு வாங்கிக் கொள்கிறேன்” என்றாள்.

அவள் போவதாகச் சொன்னதைக் கேட்டு மிகவும் துயரமடைந்த துரைராஜா, அந்த மனிதனுடைய காரியத்தை நான் திருப்திகரமாகச் செய்து விடுகிறேன். நீ அவனுடைய விலாசத்தை மாத்திரம் தாமச மின்றி எழுதியனுப்பு. அதிருக்கட்டும்; நான் அவன் விஷயத்தில் செய்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்பதை நான் உனக்கு அறிவிக்க வேண்டுமே. நீ இன்ன இடத்திலிருக்கிறாய், உன் பெயர் என்ன என்ற விவரங்கள் தெரியாவிட்டால், நான்

எப்படி உனக்கு எழுதுகிறது” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/50&oldid=646282" இலிருந்து மீள்விக்கப்பட்டது