பக்கம்:மதன கல்யாணி-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 47

வெள்ளைக்காரப் பெண், “நீர் எழுதியனுப்ப வேண்டாம். நாளைக்குச் சாயுங்காலம் அவன் எங்கள் வீட்டுக்கு வராமல் இருந்தால், உடனே எங்கள் மனிதர் அவனுடைய வீட்டுக்கு ஆள் அனுப்பி அவன் வராத காரணத்தை அறிந்து கொண்டு வரச் சொல்லுவார்கள். அதன் மூலமாக நான் தெரிந்து கொண்டு மேல் நடக்க வேண்டியதற்கு நான் உமக்கு எழுதியனுப்புகிறேன். கொஞ்ச காலத்துக்கு நீர் எனக்குக் கடிதம் எழுதுகிறதென்ற நினைவே கொள்ள வேண்ட்ாம். நாம் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளாவிட்டால், காரியம் கெட்டுப் போகும்; நான் போக வேண்டும்; நேரமாகிறது; உம்மை நம்பி இருக்கலாமா? பிரமாணமாக என்னுடைய கோரிக்கையை முடித்து வைத்து, எனக்கு சுகம் கொடுப்பீரா?” என்று கூறிய வண்ணம் எழுந்தாள். அதைக் கேட்ட துரைராஜாவும் எழுந்து, தான் அவளது விருப்பப் படியே செய்வதாய் பிரமாணம் செய்து கொடுத்தான். -

பிறகு அவர்கள் இருவரும் அவ்விடத்தை விட்டு, சந்தேகத்திற்கு இடங்கொடாமல் மெல்ல உலாவி நடந்த வண்ணம் மூர்மார்க்கெட்டு வரையில் வந்து, ஜனக்கும்பலில் கலந்து கொண்ட பின்னர், இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்து விலகினர். முகமூடி போட்டு வந்த அந்த ஸ்திரீ பக்கத்திலிருந்த டிராம் வண்டியில் ஏறி, மேற்குப் பக்கமாய்ப் போய்விட்டாள்.

அந்த அற்புதமான ஸ்திரீயின் வார்த்தைகளினாலும் அழகி னாலும் மயங்கிக் கலகலத்துப் போன துரைராஜா, திகைத்துத் திக்பிரமை கொண்டு, அவள் சென்ற பக்கம் திரும்பி, அவளது இனிய வடிவம் மறைகிற வரையில் பார்த்துக் கொண்டே நின்றான். கைக்கெட்டியது வாய்க்கெட்டாது போனதென்பதைப் போல, தன் மீது அவ்வளவு காதலும் பிரேமையும் கொண்டு தன்னைத் தேடி வந்த அந்தப் பெண்பாவை, தனக்கு ஒரு சாண் துரத்தில் உட்கார நேர்ந்ததும், தன்னிடத்தில் அவளது வரலாறுகளை எல்லாம் சொல்ல நேர்ந்ததும், அவள் இன்னாள் என்பதை இன்னமும் தான் அறிந்து கொள்ளக்கூடாமல் போனதும், அவளது கரத்தைக்கூட தான் ஸ்புரிசிக்கும் பாக்கியம் தனக்குக் கிடைக்காமல் போனதும் அவனுக்குப் பெருத்த ஏமாற்றமாக முடிந்து, ஏக்கத்தை உண்டாக்கின. அவன் என்ன செய்வதென்பதை உணராதவனாகத்

im.5.H-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/51&oldid=646283" இலிருந்து மீள்விக்கப்பட்டது