பக்கம்:மதன கல்யாணி-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 53

கல்நெஞ்சனாக இருந்ததையும் கண்ட கல்யாணியம்மாளது மனம் மிகவும் பதறியது. “ஆ தெய்வமே! எனக்கு இப்படிப்பட்ட துராத்மாவா புத்திரனாக வந்து வாய்க்க வேண்டும்! ஆகா! நான் பூர்வ ஜென்மத்தில் மகா பாதகம் செய்திருக்கிறேன்” என்று நினைத்து கல்யாணியம்மாள் தன்னைத் தானே நொந்து கொண்டாள் ஆயினும், சந்தர்ப்பத்தைக் கருதி அவள் தனது ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, தலை நோவைப் பொறாது வருந்துபவள் போல நடித்து, “அப்பா அம்மா!” என்று இரண்டு மூன்று முறை முணங்கினாள். அதற்குள் மைனர், தான் வந்திருப்பதைப் பற்றி தனது தாய்க்கு எச்சரிக்கை செய்பவன் போல, இரண்டு மூன்று முறை கனைத்து, தனது தொண்டையைச் சீர்திருத்திக் கொண்டவனாய், “இம்; சரி; எனக்கு நேரமாகிறது. அவளைவிட்டு நான் நேற்று காலையில் வந்தது. அவள் தனியாக இருப்பாள்; நான் அவசரமாகப் போக வேண்டும். இப்போது முதலில் பதினாயிரம் ரூபாய் வேண்டும். கட்டிலைவிட்டு எழுந்து வர முடியாவிட்டால், திறவுகோல் இருக்குமிடத்தைச் சொன்னால் நானே பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டு போகிறேன்” என்று மிகவும் அலட்சியமாகவும் அமர்த்தலாகவும்

கூறினான்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட கல்யாணியம்மாள் மெதுவாக எழுந்து பக்கத்திலிருந்த ஒரு திண்டில் சாய்ந்து மைனரை நோக்கிய வண்ணம், “எதற்காகப் பதினாயிரம் ரூபாய் வேண்டும்? என்றாள்.

மைனர் கல்யாணியம்மாளைப் பழிப்பவன் போலத் தனது வாயைக் கோணலாக வைத்துக் கொண்டு, “ஒகோ! எதற்காகப் பதினாயிரம் ரூபாய் வோண்டுமோ இரண்டு நாளைக்குள் எல்லாம் மறதியாகப் போய்விட்டது போலிருக்கிறது! இதுதான் பெரிய மனுஷ்யாளுடைய தர்பார் என்பது. காரியம் ஆகிற வரையில் கழுதையின் காலையும் பிடிக்க வேண்டும் என்கிறபடி இருக்கிறது நீங்கள் சொல்வது. அன்றைக்கு ராத்திரி நீங்கள் இரண்டு பேரும் பத்திரத்தில் ஆடம்பரமாகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த போது மறுநாள் வந்து அவளுக்கு வேறொரு ஜாகை அமர்த்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/57&oldid=646294" இலிருந்து மீள்விக்கப்பட்டது