பக்கம்:மதன கல்யாணி-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மதன் கல்யாணி

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “நீ செய்த தப்புக் காரியத்தினால் தான் எங்களுக்கு இப்படிப்பட்ட அவமானமும் துன்பங்களும் உண்டாயின. நீகச்சேரியில் இழுபட்டு கொள்ளைத் காரன் என்றும் கொலைக்காரன் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை அடைந்து அநியாயமாக அழிந்து போய்விடாமல் தப்ப வேண்டுமே என்ற கவலையினாலே தான் நாங்களும் அந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போடும்படியான இழிவு எங்களுக்கு ஏற்பட்டது. நீ செய்த முட்டாள் காரியத்தினால், நீயும் பெருத்த விபத்தில் மாட்டிக் கொண்டதன்றி, அதன் பொருட்டு நாங்கள் எப்படிப்பட்ட இழிவுகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக நேர்ந்தது பார்த்தாயா? அன்றிரவு நீ அம்பட்டக் கருப்பாயியின் வீட்டிலிருந்து, தப்பித்து ஓடியபின் அந்தத் திருடன், உன்னை எப்படியும் கண்டுபிடித்துக் கொன்று விடுவதாகச் சபதம் கூறினானாம். அதன் பொருட்டு நான் ஆறாயிரம் ரூபாய் கொடுக்கும்படி நேர்ந்தது. அதன் பிறகு இரவோடிரவாக நாங்கள் ஆலந்துருக்குப் போய், எங்களுடைய பெருமையை எல்லாம் இழந்து கேவலமான ஒரு தாசியிடத்தில் போய் கெஞ்சாததை எல்லாம் கெஞ்சி, அந்தப் பத்திரத்திலும் கையெழுத்துச் செய்து விட்டு வர நேர்ந்தது. வரும் வழியில் திருடர்களிடம் அகப்பட்டு, சுமார் லட்சம் ரூபாய் வரையில் பெறுமானமுள்ள சொத்துக்களை இழந்து, அடிபட்டு இடுப்புத் துணிகள்கூட இல்லாமல் அவமானப் பட்டு வர நேர்ந்தது. அது முதல் இன்னமும் நான் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. நேற்று ராத்திரி முழுதும், ஜூரத்தி னாலும் தலை நோவினாலும், நான் கண்களை மூடவே இல்லை. நிச்சயதாம்பூல முகூர்த்தம் வைத்து பெரிய மனிதர்களான எத்தனையோ ஜனங்களை அழைத்துவிட்டு, கடைசியில், அதையும் ஒத்திவைத்து அவமானப்பட நேர்ந்தது; இத்தனை சங்கடங்களுக்கும் என்னை ஆளாக்கிய நீ, ‘உடம்பில் என்ன. அசெளக்கியம்? என்ற ஒரு மரியாதை வார்த்தை கேட்கத் தாயார் ஏதோ தேக அசெளக்கியமாக இருக்கிறாளே என்ற மன இரக்கம் கூடக் கொள்ளவில்லை பார்த்தாயா? அது தான் போனாலும், நான் தேவடியாள் வீட்டுக்குப் போக வேண்டும், பணம் கொடு என்று இந்த நிலைமையில் வேறு எவனாகிலும் தன்னுடைய தாயாரிடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/60&oldid=646302" இலிருந்து மீள்விக்கப்பட்டது