பக்கம்:மதன கல்யாணி-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 6?

அப்படியே திக்பிரமை கொண்டு திகைத்துப் போய்விட்டார்களே! போலீஸ்காரரிடத்திலிருந்து அவள் என்னை விடுவித்த அந்த ஒரு தந்திரத்துக்குச் சன்மானமாக நான் அவளுக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும், இணையாகாதே.

கல்யாணி:- சரி; சொக்குப்பொடி நன்றாக ஏற்றிவிட்டது. இனிமேல் ஒடி ஆடி உபத்திரவப்பட்டு தானாகத்தான் வழிக்கு வர வேண்டும். அதிருக்கட்டும், உன்னைப் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து விடுவித்தபோது அவள் ஏதோ தந்திரம் செய்தாள் என்கிறாயே. அது என்ன தந்திரம்.

மைனர்:- ஆகா! எப்படிப்பட்ட தந்திரம் தெரியுமா! அதை நினைத்தால், எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது. அவள் இது வரையில் ஒரு நாடகத்தில் இருந்து வந்தால் அல்லவா, அதன் சொந்தக்காரனான ஒரு கிழவன், அவள்மேல் மோகங்கொண்டு, அவளை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு, தினம் தினம் ஆயிரக்கணக்கில் வந்து குவியும் அவனுடைய பணத்தை எல்லாம் அவளிடத்தில் கொண்டு வந்து கொட்டி, அவளை தேவேந்திர போகத்தில் ஆழ்த்திக் கொண்டிருந் தான். ஆனால் அவளுக்கு அவன் மேல் கொஞ்சமும் பிரியமே இல்லை. அவள் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அவனிடம் எல்லாவற்றையும் நன்றாகக் கறந்து கொண்டே வந்தாள். அவளுடைய பங்களாவில் கொள்ளை நடந்ததனால், அங்கே இருந்த ஆடையாபரணங்கள் பணம் முதலிய சகலமான சொத்தும் போய்விடவே, அந்தக் கிழவன் மறுநாளே, திரும்பவும் எல்லாப் பொருளையும் கொண்டு வந்து நிரப்பி, கொள்ளைப் போன சொத்துக்களைப் பற்றி அவள் கொஞ்சமும் விசனப்படாத படி, அவன் அவளை சந்தோஷப்படுத்தினான். அவளுடைய பாதுகாப்புக்கு வேண்டிய ஆள்மாகாணங்களை எல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தானாம். அன்று சாயுங்காலம் அவளைத் தனியாக விட்டுவிட்டு, நாடகத்துக்காகப் போய்விட்டானாம். அன்று இரவு தான் நீங்கள் அவளுடைய பங்களாவுக்குப் போனிகளாம். நீங்கள் அவளிடத்திலிருந்து வந்த பிறகு, ராத்திரி 2-மணிக்கு அவன் ஒரு மோட்டார் வண்டியில் பங்களாவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/65&oldid=646311" இலிருந்து மீள்விக்கப்பட்டது