பக்கம்:மதன கல்யாணி-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மதன கல்யாணி

வந்து சேர்ந்து, பொழுது விடிகிற வரையில், அவளுக்கு வேண்டிய சைத்தியோபசாரங்களை எல்லாம் செய்து கொண்டிருந்தானாம். நீங்கள் வந்த விவரம் முதலிய எதையும் அவள் அவனிடத்தில் சொல்லவில்லையாம்; வேலைக்காரர்களிடத்திலும், அந்த விஷயத்தைப் பற்றி எச்சரித்து வைத்திருந்தாளாம். அவள் அவனிடத்தில் பரமப்பிரீதியாக இருப்பவளைப் போல நடித்தாளாம். பொழுது விடிந்தவுடன் ஒரு போலீஸ்காரன் வந்து சப் இன்ஸ்பெக்டர் அழைப்பதாகச் சொன்னானாம். உடனே கிழவன் அவனைத் தனது மோட்டார் வண்டியில் உட்கார வைத்துக் கொண்டு மகா பெருமையாகவும் அமர்த்தலாகவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தான். நான் அதுவரையில் என்னுடைய பெயரையும் வெளியிடவில்லை; சாப்பிடவு மில்லை. பாலாம்பாள் வந்து எப்படியும் என்னை விடுவிப்பாள் என்று நான் உறுதியாக நினைத்திருந்தேன். அந்தக் கொள்ளைக் கேசில், பாலாம்பாள் வாக்குமூலம் கொடுக்கப் போகிறாள் என்பதை உணர்ந்து, ஆலந்துரில் உள்ள ஜனங்கள் யாவரும் ஆயிரக்கணக்கில் ஸ்டேஷனுக் கெதிரில் வந்து நெருங்கி நின்றனர். அந்தச் சமயத்தில் சிறைச்சாலைக்குள்ளே இருந்த என்னை சில போலீஸ்காரர் வெளியில் அழைத்து வந்து சப் இன்ஸ்பெக்டருக் கெதிரில் நிறுத்தினார்கள். அப்போது சப் இன்ஸ்பெக்டர் அவருக் கெதிரில் நின்ற பாலாம்பாளைப் பார்த்து, “உன்னுடைய பங்களாவில் கொள்ளை நடந்தபோது அங்கே வந்திருந்த திருடர்களில், இவனும் ஒருவன் தானா?” என்றார். அதைக் கேட்ட பாலாம்பாள் அப்போது தான் என் பக்கம் திரும்பி நான் நின்றதைக் கண்டாள். கண்டவுடனே அவள் திகைத்து திக்பிரமை கொண்டு இரண்டொரு நிமிஷ நேரம் வாய் திறந்து பேசமாட்டாமல் தவித்து பிறகு சப் இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “ஐயா! என்ன இது இவரையா இந்த இரண்டு நாளாக நீங்கள் சிறையில் வைத்திருக்கி றிர்கள் உண்மையான திருடன் எவனையோ நீங்கள் பிடித்து அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்றல்லவா நான் இது வரையில் நினைத்திருந்தேன். எப்படிப்பட்ட அக்கிரமமான காரியம் செய்து விட்டீர்கள் இவர் ஒரு பெருத்த சமஸ்தானத்தின் அதிபதி யல்லவா? இவருடைய முகத்தைப் பார்த்து இவர் திருடர் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/66&oldid=646312" இலிருந்து மீள்விக்கப்பட்டது