பக்கம்:மதன கல்யாணி-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 83

எந்தக் குருடனாவது சொல்லுவானா விட்டுவிடுங்கள் இவரை அடாடா என்ன கர்மம் இது. இதுதானா போலீசாருடைய நீதி?” என்று கனிர் கணிர் என்று மணியடிப்பதைப் போல மிகவும் கம்பீரமாகவும் அழுத்தமாகவும் பேசவே, சப் இன்ஸ்பெக்டர் முதலிய போலீசார் கலகலத்துப் போயினர். ஜனங்கள் யாவரும் திகைப்பும் வியப்பும் பதைபதைப்பும் அடைந்து போலீசாருடைய அக்கிரமத்தைப்பற்றி முணுமுணுக்கத் தொடங்கினர். அப்போது பாலாம்பாளுக்குப் பக்கத்தில் நின்றிருந்த நாடகக்கார கிழவனும் வியப்படைந்து, பாலாம்பாளுடைய முகத்தையும் என்னுடைய முகத்தையும் மாறி மாறிப் பார்த்தவனாய் விழித்துக் கொண்டு நின்றான். அப்போது சப் இன்ஸ்பெக்டர் மறுபடியும் பாலாம் பாளைப் பார்த்து, “அன்றிரவில், உனக்கெதிரில் தானே நாங்கள் இவரைக் கைதி செய்தோம். நீ ஏன் அப்போதே இந்த விவரத்தைச் சொல்லவில்லை?” என்று அதிகாரமாகக் கேட்க, பாலாம்பாள் முற்றிலும் குழம்பினவளாக நடித்து, “ஐயோ! எனக்கெதிரிலா இவரைப் பிடித்தீர்கள்? அதை நான் பார்க்கவே இல்லையே. நீங்கள் என்னுடைய கட்டுகளை அவிழ்த்து விட்டபோது என்னுடைய ஸ்மரணை தப்பிப் படுத்தவள் இன்று காலையில் தானே நான் என்னுடைய சுயநினைவை அடைந்தேன். ஆகா! இவரை நீங்கள் பிடித்துக் கொண்டு போகிறீர்கள் என்பது அப்போதே எனக்குத் தெரிந்திருந்தால் நான் சும்மா இருந்திருப்பேனா இந்தச் சிறைச்சாலைக்கு வரும்படியான இழிவும் துன்பமும் இவருக்குத்தான் ஏற்பட்டிருக்குமா!” என்றாள்.

அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் முன்னிலும் அதிகரித்த கலக்கமும் குழப்பமும் அடைந்து, “அப்படியானால், இவர் அன்றைய ராத்திரி உன்னுடைய படுக்கையறையில் இருக்கக் காரணம் என்ன?” என்றார்.

அதைக் கேட்ட பாலாம்பாள் சப் இன்ஸ்பெக்டரைப் பார்த்துப் புரளி செய்பவள் போலக் கலகலவென்று சிரித்து, “நல்ல அழகான கேள்வி இது? பி.ஏ., எம்.ஏ., படித்த இன்ஸ்பெக்டர் ஒரு பெண் பிள்ளையைப் பார்த்துக் கேட்கக்கூடிய கேள்வியா இது இவரைத்

in.go.ii-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/67&oldid=646314" இலிருந்து மீள்விக்கப்பட்டது