பக்கம்:மதன கல்யாணி-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 65

“பாலாம்பாள்! நாங்கள் கேள்வி கேட்டால், அது சாட்சிகளுக்கு சங்கடத்தை உண்டாக்கக்கூடிய கேள்வியாக இருந்தாலும், அவள் அதற்கு சரியான மறுமொழி சொல்லியே தீரவேண்டும். நீயோ தாறுமாறாகப் பதில் பேசுகிறாய். ஏதோ அறியாத பெண்பிள்ளை ஆயிற்றே என்ற தயவினால் நான் இதுவரையில் என்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தேன். இந்த மனிதருக்கும் உனக்கும் என்ன உறவு என்பதையும், இவர் யார் என்பதையும், நீ எங்களிடம் வெளியிட்டாலல்லது நாங்கள் உன்னுடைய வார்த்தையைக் கொண்டே இவரை விட முடியாது. உன்னை யாரோ கலைத்து இப்படி மாற்றிச் சொல்லும்படி தூண்டி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது” என்று கண்டிப்பாகப் பேசினார். அதைக் கேட்ட பாலாம்பாள் மிகவும் துடியாக அவருக்கு மறுமொழி சொல்ல ஆரம்பித்து “சரி; இவர் யார் என்பதையும், இவர் திருடரல்லர் என்பதையும் திருப்திகரமாக உங்களுக்கு மெய்ப்பிக்கிறேன். ஆனால், அந்த விவரத்தை நான் இத்தனை ஜனங்களுக்கு முன்னால் சொல்ல மாட்டேன். இதோ இந்த தஸ்தாவேஜைப் பாருங்கள்” என்று சொல்லிய வண்ணம் சப் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருந்த மேஜைக்கருகில் போய் நின்று கொண்டு தன்னுடைய மடியில் சொருகிக் கொண்டிருந்த நம்முடைய பத்திரத்தை எடுத்து அவருக்கு மாத்திரம் காட்ட, அவர் அதைப் படித்துப் பார்த்து, அதிலிருந்து சில விவரங்களைத் தம்முடைய புஸ்தகத்தில் எழுதிக் கொண்டதன்றி, என்னைக் கூப்பிட்டு, ஒரு காகிதத்தில் என்னுடைய கையெழுத்தைப் போடச் செய்து, அதையும், பத்திரத்தின் எழுத்துகளையும் ஒத்திட்டுப் பார்த்து, “சரி, நீ சொன்னதை எல்லாம் ஒப்புக் கொண்டேன். இவர் திருடர் என்று தவறுதலாகப் பிடிபட்டார் என்பது நிஜமே. அதைப் பற்றி எங்களுக்கு நிரம்பவும் விசனமாக இருக்கிறது. இவர் இனி சுயேச்சையாகப் போகலாம். ஆனால் அதற்கு முன் உன்னிடத்தில் இன்னொரு கேள்வி கேட்க வேண்டும். அதற்கு மாத்திரம் நீ பதில் சொல்லிவிட்டு உன்னுடைய புருஷனோடு நீ ஜாகைக்குப் போகலாம். உனக்கு இந்தப் பக்கத்தில் பகையானவர்கள் யாராவது இருக்கிறார்களா? இந்தத் திருட்டு நடந்த விஷயத்தில் உனக்கு யார் பேரிலாவது சந்தேகம் உண்டா? அப்படி இருந்தால், சொல்லிவிடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/69&oldid=646318" இலிருந்து மீள்விக்கப்பட்டது