பக்கம்:மதன கல்யாணி-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3

சிறிதும் துயிலாமலும், சரியானபடி போஜனம் செய்யாமலும், பலவிடங்களுக்குச் சென்றலைந்த துன்பங்களினாலும், பலவகைப்பட்ட மனவேதனைகளினாலும், திருடர்களது பீதியினாலும் தளர்ந்து தள்ளாடி ஒய்ந்து எப்போது படுக்கப் போகிறோமென்ற அளவற்ற ஆவலோடு வந்தவளாதலால், கட்டிலில் படுத்தது அவளுக்கு பிரம்மாநந்த சுகமாக இருந்தது. கட்டிலில் படுத்துக் கைகால்களை நீட்டிவிட்டு இப்புறம் அப்புறம் இரண்டு மூன்று முறை புரண்ட பிறகே, அவளது தேகம் கட்டுக்கடங்கியது. அவ்வாறு அவளது சரீரம் சிறிது அமைதி யடைந்ததானாலும் அவளது மனத்துன்பங்கள் மாத்திரம் பழைய நிலைமையிலேயே இருந்து அவளை வதைத்துக்கொண்டிருந்தன. இன்னதென்று அறியவொண்ணாத பலவகையான சஞ்சலங்கள் அவளது மனதையும் அடிவயிற்றையும் குழப்பிப் புண்படுத்திக் கொண்டிருந்தன. ஐந்து நிமிஷ நேரம் படுத்திருந்தவள் உடனே எதையோ நினைத்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்து தனது தலைப்பக்கத்திலிருந்த மின்சார விளக்கின் விசையை அழுத்த, அந்தப்புரத்தில் பளிச்சென்ற பிரகாசம் உண்டாயிற்று. அப்போது தற்செயலாக தனது உடம்பையும் சேலையையும் நோக்கிய கல்யாணியம்மாள் மிகவும் வெட்கமடைந்தாள். அவள் எப்போதும் வைர ஆபரணங்களையும், உயர்ந்த பட்டாடை களையும் இடைவிடாமல் அணிந்திருப்பவளாதலால், எவ்வித ஆபரணமுமின்றி ஒளிமழுங்கி மரம்போல இருந்த தனது தேகத்தையும், தன்மீதிருந்த நான்கு ரூபாய் பெறுமானமுள்ள மதுரைச் சுன்னடிச் சேலையையும் பார்க்க, அவள் தனக்குத் தானே மிகுந்த லஜ்ஜை அடைந்ததன்றி, தான் மாரமங்கலம் ஜெமீந்தாரிணியான கல்யாணியம்மாள் தானோ என்ற ஒருவகை யான ஐயமுங்கொண்டாள். தான் எதிர்பாராத வகையில் தனக்கு ஏற்பட்ட இழிவையும் ஆபத்தையும் நினைத்து அவள் இரண்டொரு நிமிஷநேரம் தனக்குள் துக்கித்தவளாய், தான் அப்படிப்பட்ட கேவலமான நிலைமையிலிருப்பதை எவரேனும் காண்பாரானால், அதனால் தனக்கு மிகுந்த இழுக்கே நேருமென்று நினைத்தவளாய், சரேலென்று கட்டிலை விட்டிறங்கி, தனது ஆடையாபரணங்களிருந்த பெட்டிகளைத் திறந்து, உயர்வான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/7&oldid=646319" இலிருந்து மீள்விக்கப்பட்டது