பக்கம்:மதன கல்யாணி-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 69

வெகு சீக்கிரத்தில், உன்னுடைய பிரியப்படி, நம்முடைய கண்மணியம்மாளை உனக்குக் கட்டிவிடுகிறேன். நீங்கள் சந்தோஷமாக இருங்கள்” என்றாள்.

அதைக் கேட்ட மைனர் புரளியாக நகைத்து, “ஒகோ பாலாம் பாள் நம்மை எல்லாம் சும்மா விட்டுவிடுவாள் என்று நினைக்க வேண்டாம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வாங்குதுமல்லாமல், கிரிமினல் தரப்பிலும் நம்மை இழுத்து ஜெயிலில் அடைத்துவிட மாட்டாளா!” என்றான். கல்யாணியம்மாள், “நாம் எல்லோரும் அப்படிப்பட்ட அபாயத்தில் மாட்டிக் கொள்ளும்படியான காரியத்தை நான் செய்யச் சொல்லுவேனா? நீ ஒரு காரியம் செய்; இப்போது உனக்குத் தேவையான அளவு பணத்தை எடுத்துக் கொண்டு போய், அவளிடத்தில் சந்தோஷமாகவும் சந்தேகத்துக்கு இடங்கொடுக்காமலும் நடந்துகொள். அந்தப்படியாக இருந்து, அந்தப் பத்திரத்தை அவள் எங்கே வைத்திருக்கிறாள் என்பதைக் கண்டு பிடித்து, அதை மெதுவாக எடுத்துக்கொண்டு வந்துவிடு. அல்லது, அங்கேயே நெருப்பில் போட்டு அழித்துவிடு. அது போதும். அவள், நம்மை எல்லாம் வஞ்சித்துத் தானே அதை எழுதி வாங்கினாள். அவளை நாமும் வஞ்சித்து, அதை விலக்கிக் கொள்ளுவது பாவமாகாது; நியாயமான வழியில் நடக்கிறவர்களை நாமும் நியாயமாக நடத்த வேண்டும். மோசத்தை மோசத்தினால் தான் ஜெயிக்க வேண்டும்” என்றாள். -

அதைக் கேட்ட மைனர் மிகுந்த பதைப்போடு எழுந்து நின்று, “நல்ல காரியம் செய்யச் சொல்லுகிறீர்கள்! நாம் அவளுடைய பங்களவைத் தேடிப்போய், நாமாகப் பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு வந்தோமே அல்லது, அவள் நம்மை வஞ்சித்து பலவந்த மாகப் பத்திரம் எழுதி வாங்கவில்லை. என் விஷயத்தில் அவள் டந்து கொண்ட வரையில் அவள்மேல், நான் ஒரு கடுகளவும் குறை சொல்ல நியாயமில்லை. ஏதடா இவனும் போய் சந்தோஷப் பட்டுப் போகிறானே என்கிற பொறாமையினால், எங்களைச் சேர விடாமல் அடித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் போல் இருக்கிறது! வாலறுந்த நரியின் கதையைப் போல தனக்குப் புருஷன் பாலிய வயசிலேயே இல்லாமல் போய் விட்டால், தன்னைப் போலவே உலகத்திலுள்ள பெண் பிள்ளை எல்லோரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/73&oldid=646327" இலிருந்து மீள்விக்கப்பட்டது