பக்கம்:மதன கல்யாணி-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 74

விபத்தும் அந்த விஷயத்தைப் பிறர் அறிவதான மானஹானியும் உண்டாகி விடுமே என்ற கவலையும் சஞ்சலமும் எழுந்து வதைக்கத் தொடங்கின. மைனர் மிகுந்த பிடிவாத குணமுள்ளவன் ஆதலால், அவனது விருப்பத்திற்கு மாறாகப் பேசி அவனது மூர்க்க குணத்தை அதிகபடுத்துவதைக் காட்டிலும், அவனிடத்தில் அன்பாகப் பேசி, அவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்று நினைத்த கல்யாணியம்மாள், தனது உணர்ச்சிகளை எல்லாம் அடக்கிக் கொண்டு, அன்பான குரலில் பேசத் தொடங்கி, “அப்பா! தம்பி! நீ சந்தோஷப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறதாக நினைக்காதே. பதினாயிரமல்ல, இருபதினா யிரம் ரூபாய் வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுக்கத் தடையில்லை; அவளோடு நீ சிநேகமாகவே இரு. ஆனால், நான் சொன்னதை எல்லாம் உன் மனசுக்குள்ளாகவே சிந்தனை செய்து பார்ப்பாயானால், எல்லாம் சரியான வார்த்தை என்பதை அறிந்து நீயே சரியானபடி நடந்து கொள்வாய். அந்தப் பத்திரத்தை நீ எடுத்துக் கொண்டு வரவேண்டாம். அதை அவளே வைத்துக் கொள்ளட்டும். ஆனால், நீ அதை சப் ரிஜிஸ்டரார் கச்சேரியில் பதிவு செய்வதாகச் சொன்னாயே, அதை மாத்திரம் செய்ய வேண்டாம். ஏனென்றால், ரகசியமாக இருக்க வேண்டிய இந்த விஷயம், பலர் அறிய பகிரங்கத்துக்கு வந்துவிடும். ஊரில் உள்ள வர்கள் எல்லாரும் நம்மை இழிவாக மதித்து ஏளனம் செய்வார்கள். துரைஸ்ானியம்மாள், கோமளவல்லியம்மாள் இவர்களுக்கெல் லாம் கலியாணம் ஆக வேண்டும். இதனால், அதற்கு பெரிய இடைஞ்சல் ஏற்பட்டுவிடும். அவளுடைய பேச்கைக் கேட்டு, அந்தக் காரியத்தில் மாத்திரம் இறங்கிவிடாதே” என்று கூறிய வண்ணம் மெதுவாக எழுந்து கட்டிலை விட்டுக் கீழே இறங்கிப் போய், இரும்புப் பெட்டியைத் திறந்து, பதினாயிரம் ரூபாய்க்கு நோட்டுகளை எடுத்து மேஜையின் மீது வைத்துவிட்டு, மறுபடியும் வந்து கட்டிலின் மீதேறிப் படுத்துக்கொண்டாள்.

அதற்கு முன் கடுமையான அதிகாரம் செலுத்தி, தன்னை நடுங்கச் செய்துவந்த கொடுங்கோல் சக்கரவர்த்தினியான தனது தாய், தனக்கு அடங்கிப் போய் விட்டாள் என்ற நினைவினால் மிகுந்த இறுமாப்படைந்த மைனர், தான் இனி தனக்குத் தேவையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/75&oldid=646330" இலிருந்து மீள்விக்கப்பட்டது