பக்கம்:மதன கல்யாணி-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மதன கல்யாணி

கடிதம்

மகா-ா-ா-பூநீ மகாகனம் பொருந்திய மீனாகூஜியம்மாள் அவர்களுக்கு கல்யாணியம்மாள் நமஸ்காரம் செய்து எழுதிக் கொள்வது; உபய க்ஷேமம்.

நேற்றைக்கு முந்திய நாள் பகலில் நீங்கள் இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போன பிறகு, என்னுடைய தேக அசெளக்கியம் அதிகரித்திருக்கிறதன்றி குறையவில்லை. வைத்தியர்கள் அடிக்கடி வந்து பார்த்து மருந்து கொடுத்துவிட்டுப் போகிறார்கள். அப்படி இருந்தும், குணம் ஏற்படவில்லை. நேற்று இரவு முழுதும் தலைநோவினாலும், ஜூரத்தினாலும் நான் நிரம்பவும் சங்கடப்பட்டேன் இமைப்பொழுது கூட நான் துங்க வில்லை. இந்த மூன்று நாளைய ஜூரத்தினாலும், ஆகாரம் நித்திரை முதலியவை பிடியாமையினாலும், நான் படுக்கையை விட்டு எழுந்திருக்கவும் வல்லமை அற்றவளாக இருக்கிறேன். என்னுடைய உடம்பு இன்றைக்குள் சரியான நிலைமைக்கு வரா விட்டால், நிச்சயதாம்பூல முகூர்த்தத்தை நிறுத்தி விடுவோம் என்று நீங்கள் அன்றைய தினம் சொன்னிர்கள். அதை நான் ஒப்புக் கொள்ளாமல், எப்படியும் அதை இன்றைய தினம் முடித்து விடலாம் என்று உங்களிடம் நான் உறுதியாகச் சொல்லி இருந்தேன். கடைசியில், நீங்கள் சொன்னபடியே தான் செய்யும் படி நேர்ந்துவிட்டது; இந்த முகூர்த்தத்தை மிக விமரிசையாக நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகையால், நான் படுத்த படுக்கையாக இருக்கும் போது, அதை நடத்தினால், அது அவ்வளவு திருப்திகரமாக நடக்கும் என்று நான் நினைக்க வில்லை. அதுவும் தவிர, இதன் பொருட்டு மிகவும் கண்ணியம் பொருந்திய எத்தனையோ பிரபுக்களும் சீமாட்டிகளும் வருவார்கள். அப்போது, நான் விகாரமாகப் படுத்திருப்பதும், அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் வந்து சந்தோஷத்துக்குப் பதிலாக, அநுதாபப்படுவதும் என் மனசுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

என் மனசில் மாத்திரம் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே வதைக்கிறது. இறந்து போன என்னுடைய எஜமானருடைய விருப்பத்துக்கு மாறாக நான் இதுகாறும் எந்தக் காரியத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/78&oldid=646336" இலிருந்து மீள்விக்கப்பட்டது