பக்கம்:மதன கல்யாணி-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மதன கல்யாணி

வேறொரு சேலையையும், இன்னெரு ஜதை ஆபரணங்களையும் எடுத்து, அதிக விரைவாக அணிந்துகொண்டு, நிலைக்கண்ணாடியில் தனது அழகைப் பார்த்துத் திருப்தியடைந்தவளாய், சிறிது துரத்தில் கிடந்த தனது சாய்மான நாற்காலியில் உட்கார்ந்து உல்லாஸ்மாகச் சாய்ந்துகொண்டாள். அவ்வாறு சாய்ந்ததனால், அவளது மனதின் வேதனைகள் திரும்பவும் தலைகாட்ட ஆரம்பித்தன. முதல் நாளைய இரவில் நடந்த வழிப்பறியின் நினைவே மற்றவை களைவிட அதிக உறுதியாக மனதில் எழுந்து அப்போதே நிகழும் நாடகக் காட்சிபோல சான்னித்தியம் செய்யத் தொடங்கியது. அந்தத் திருடர்களை நினைக்கும் போதே அவளது தேகம் கிடுகிடென்று நடுங்கியது. அடிமுதல் முடிவரையில் உரோமம் சிலிர்க்க, தேகம் முழுதும் சகிக்கவொண்ணாத ஒருவித மரப்புப் பரவியது. வண்டிக்காரனது அபார சக்தியினாலும், அபூர்வமான தந்திரத்தினாலும், தாங்கள் தப்பியதை நினைக்க நினைக்க, அவளது மனதில் ஒரு வகையான வியப்பும், ஆனந்தமும், தெய்வபக்தியும் சுரந்தன. போலீஸ் இன்ஸ்பெக்டரைப் போல உருமாரி வந்து, தங்களது மூட்டையை அபகரித்துக்கொண்டு போனவர் யாராயிருக்கக்கூடுமென்று, அவள் எவ்வளவு தூரம் யோசித்தும், எதுவும் விளங்காமல் போயிற்று. ஒருகால் அவர் சென்னையைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டராயிருப்பாரோ என்றும், அவரே சமயம் பார்த்து அவ்வாறு மூட்டையை அபகரித்துக்கொண்டு போயிருப்பாரோவென்றும், சென்னையிலும் பக்கங்களிலும் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்களையெல்லாம் சிவஞான முதலியாரைக் கொண்டு பார்க்கச்செய்தால், அந்தச் சந்தேகம் தீர்ந்துவிடுமென்றும் கல்யாணியம்மாள் எண்ணமிட லானாள். அவளுக்குத் தனது பணம், ஆபரணங்கள், சேலை முதலியவைகள் களவு போனதைப் பற்றி சிறிதும் விசனமே உண்டாகவில்லை, பாலாம்பாள் தனக்கு எழுதிக்கொடுத்த கடிதம் போனதைப் பற்றியே அவள் கரைகடந்த விசனமும் அளவற்ற கவலையுமடைந்தாள். ஆனால், தாங்கள் அந்தக் கடிதத்தை இழந்து விட்டோமென்ற செய்தி பாலாம்பாளுக்குத் தெரியாதாகை யால், அந்தக் கடிதம் இன்னமும் தங்களிடத்தில் இருப்பதாகவே எண்ணி பாலாம்பாள் தனது வாக்குறுதியை நிறைவேற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/8&oldid=646339" இலிருந்து மீள்விக்கப்பட்டது