பக்கம்:மதன கல்யாணி-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 77

பின்புறமாகப் போய், அவருடைய கண்ணில் படாமல் மறைந்து வெளியில் போய்விடு” என்றாள். அதைக் கேட்ட மோகனரங்கன், திரும்பி வந்து, கட்டிலிற்குப் பக்கத்திலிருந்த பின்புற வாசலை அடைந்து, உட்புறத்தில் தாளிடப்பட்டிருந்த கதவைத் திறந்து கொண்டு அப்புறம் போய், கதவை மறுபடியும் சாத்திவிட்டு, அப்பால் போய்விட்டான்.

கல்யாணியம்மாள் அந்தக் கதவை உட்புறத்தில் தாளிட வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவளாய், படுக்கையை விட்டுக் கீழே இறங்கி சந்தடி செய்யாமல் மெல்ல நடந்து, அந்தக் கதவண்டை வந்து அதன் தாளில் கையை வைக்கப் போன சமயத்தில், அதற்கு அப்புறத்தில் மனிதரது காலடி ஓசையும், ரகசியமாகப் பேசிய குரலோசையும் உண்டானதை உணர்ந்தவ ளாய், திடுக்கிட்டு, தனது வலது செவியை கதவின் மேல் வைத்து உற்றுக் கவனித்தாள்; ஓசை மாத்திரம் உண்டாயிற்றே ஒழிய அது இன்னதென்பது விளங்கவில்லை. அப்புறத்தில் இருந்த அறை, புஸ்தக பிரோக்கள் நிறைந்த விஸ்தாரமான ஒரு மகால்; மோகன ரங்கன் நடந்து போனதனால், அந்த ஓசை உண்டாயிருக்குமோ என்று கல்யாணியம்மாள் முதலில் சந்தேகித்தாள். ஆனால், மனிதர் கொச கொசவென்று பேசிய குரல் கேட்டது. தான் உடனே கதவைத் திறப்பதும் அவளுக்கு உசிதமாகப்படவில்லை. கதவில் இண்டு இடுக்குகள் ஏதேனும் இருக்குமோ என்று அவள் ஆராய்ந்து பார்த்தாள். எதுவும் காணப்படவில்லை. அந்தக் கதவிற்கு சிறிது துரத்திற்கப்பால், ஒரு ஜன்னல் இருந்தது. அது விளாமிச்சம் வேர்த்தட்டியால் வெளிப்புறத்தில் மறைக்கப் பட்டிருந்தது. கல்யாணியம்மாள் ஓசை இல்லாமல் விரைவாக நடந்து, அந்த ஜன்னலை அடைந்து, விளாமிச்ச வேர்த் தட்டியின் ஒரு பக்கத்தைப் பிடித்து மெதுவாகச் சிறிது தூரம் தள்ளி, அதனால் உண்டான சிறிய இடைவெளியால், அப்புறத்தில் தனது பார்வையைச் செலுத்தினாள். இந்த அம்மாளது பார்வை, நேராகச் செல்லக் கூடாது போனமையால் அப்புறம் இருந்த மனிதரை அவள் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால், கல்யாணியம்மாளது பார்வையானது, ஓசையுண்டான அறையின் வலது பக்கச்சுவரில் போய் விழுந்தது. அந்தச் சுவரில் பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/81&oldid=646343" இலிருந்து மீள்விக்கப்பட்டது