பக்கம்:மதன கல்யாணி-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மதன கல்யாணி

ஜன்னலுக்கு அப்பால் நின்று, விளாமிச்சம் வேர்த்தட்டியின் பக்கத்திலிருந்த இடைவெளியின் வாயிலாக, கல்யாணியம்மாள் சிறியோர் இருவரும் செய்த காரியங்களை எல்லாம், நிலைக் கண்ணாடியில் கண்ணாரக் கண்ட போது அவளது மனம் எப்பாடு பட்டிருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள வேண்டுமேயன்றி, அது சொல்லிலடங்காததாக இருந்தது. அவர்கள் செய்த அக்கிரமச் செய்கைகளை மாத்திரம் ஒன்று விடாமல் அவள் உணர்ந்தாளே அன்றி, அவர்கள் சம்பாஷித்த வார்த்தைகள் தெளிவாக அவளது செவிக்கு எட்டவில்லை என்றாலும், துரைஸானியம்மாள் மோகனரங்கனிடத்தில் கள்ள நட்பு வைத்துக் கொண்டிருக்கிறாள் என்ற விஷயம் சந்தேகமற நன்றாக ருஜூவாகி விட்டமையால், கல்யாணியம்மாளது தேகம் பதறியது; மனம் கட்டிலடங்காமல் கொதித்தது. கரைகடந்த கோபமும் துக்கமும் பொங்கி எழுந்தன. கண்ணி தானாக வழிகிறது. அந்த அம்மாள் அடியில் வருமாறு தனக்குத் தானே எண்ணமிடலானாள். “ஆகா என்ன ஆச்சரியம்! இது கனவா அல்லது உண்மையில் நடப்பதா! இவள் என்னுடைய மகள் துரைஸாணிதானா எப்படிப்பட்ட உயர்வான வமிசத்தில் உதித்த பெண்ணின் புத்தி இவ்வளவு கேவலத்தில் இருக்குமா என் புருஷரையன்றி அயல் புருஷரை மனசாலும் நினைத்தறியாத நான் இப்படிப்பட்ட இழிகுணம் உடைய மகளையா பெற்றேன்! ஐயோ! பாழாய்ப்போன வயிறே! இப்படிப்பட்ட விபசாரி உன்னிடத்தில் பத்து மாசகாலம் இருக்க இடங்கொடுத்தாய் அல்லவா!’ என்று கல்யாணியம்மாள் தனது வலக்கரத்தை ஓங்கி, அடிவயிற்றில் அறைந்து கொண்டு, “இவளுக்கு அதிசீக்கிரத்தில் தக்க இடத்தில் கலியானம் செய்து வைக்க வேண்டும் என்று, நான் நினைத்ததென்ன! இதற்குள் இவள் இப்படிப்பட்ட துன்மார்க்கத்தில் இறங்கிவிட்டாளே! இவளுடைய துடுக்கான வார்த்தைகளில் இருந்தே நான் இவளைப் பற்றிப் பல தடவைகளில் கவலைப்பட்டது, நிஜமாக முடிந்து விட்டதே! பிள்ளைதான் அப்படித் தறுதலையாக போய்விட்டான் என்றால், பெண்களாவது நம்முடைய பெயரைக் கெடுக்காமல் இருக்கக்கூடாதா? இவள் இவ்வளவு தூரம் கெட்டு விடுவாள் ான்று நான் கனவில்கூட சந்தேகிக்கவில்லையே! ஐயோ! நல்லவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/84&oldid=646348" இலிருந்து மீள்விக்கப்பட்டது