பக்கம்:மதன கல்யாணி-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மதன கல்யாணி

பொன்னம்மா ஒரு காரியம் செய்! நீ உடனே ஒரு குதிரை வண்டி அமர்த்திக் கொண்டு, வேகமாய்ப் போய், அம்பட்டத் கருப்பாயியை நான் அழைத்து வரச் சொன்னதாக உடனே அழைத்துக் கொண்டு வா; அவளை இங்கே இருக்கும் ஜனங்கள் எவரும் கவனிக்காதபடி தந்திரமாக ராத்திரி அழைத்து வா” என்று கூறிய வண்ணம் எழுந்து, மேஜையண்டை போய், வண்டிச் செலவுக்காக இரண்டு ரூபாயை எடுத்து, அவளிடம் கொடுக்க, அவள் அதை வாங்கிக் கொண்டு வெளியில் போய்விட்டாள்.


17-வது அதிகாரம்

பறவையும் கிராதனும் துரையம்மாள் என்ற போலி வெள்ளைக்காரப் பெண்ணின் ஆக்ஞையை நிறைவேற்றும் பொருட்டு கோமளேசுவரன் பேட்டையை நோக்கிச் சென்ற துரைராஜா சுந்தர விலாஸ் என்று பெயர் கொண்ட ஜாகை எங்கே இருக்கிறது என்பதை தபால்காரனிடத்தில் விசாரித்து அறிந்து கொண்டு அங்கே போய்ச் சேர்ந்தான். அது நாகப்ப முதலி தெருவிலிருந்து ஒரு பெருத்த மெத்தை வீடு; துரைராஜா தான் வண்டியிற் சென்று அங்கே இறங்கினால் பிறர் தன்னை கவனிப்பார்கள் என்ற நினைவு கொண்டவனாய் கால் நடையாகவே நடந்து சென்று, சுந்தர விலாஸ் என்பது இன்னவீடு என்பதைக் கண்டு கொண்டான். அது அழகான உயர்ந்த வெளித்தோற்றத்தை உடைய ஒரு புதிய மெத்தை வீடாக இருந்தது. அதன் வெளிப்புறத்துக் கதவும் ஜன்னல் கதவுகளும் மேன்மாடத்தின் ஜன்னல் கதவுகளும் இறுக மூடி உட்புறத்தில் தாளிடப் பெற்றிருந்தன. அந்த வீட்டின் உட்புறத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை முதலில் விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பது துரைராஜாவின் விருப்பம். அவன் தனது சட்டப் பைக்குள், ரிவால்வர் என்ற ஒரு கைத்துப்பாக்கியை மறைத்து வைத்துக் கொண்டிருந்தான். வேறே எவரும் இல்லாத இடத்தில் மதனகோபாலன் தனியாக அகப்பட்டுக் கொள்வானாகில் அவனை ரிவால்வரால் சுட்டுக் கீழே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/86&oldid=646352" இலிருந்து மீள்விக்கப்பட்டது