பக்கம்:மதன கல்யாணி-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 5

வைப்பாள் என்ற ஒரு தைரியம் அவளது மனதில் இருந்து கொண்டிருந்தது. அத்தனை துன்பங்களைக் காட்டிலும் தானும் சிவஞான முதலியாரும் பத்திரத்தில் கையெழுத்திட நேர்ந்ததே மகா விபரீதமான துன்பமாகக் காணப்பட்டு, அவளை இடைவிடாமல் வதைத்துக் கொண்டிருந்தது. அன்றைய தினம் இரவில் கண்மணியம்மாளுக்கும், மைனருக்கும் நிச்சயதாம்பூல முகூர்த்தம் வைக்கப்பட்டிருந்த விஷயத்தில் தான் என்ன செய்கிறதென்று அவன் யோசித்து யோசித்து தனது மூளையைச் சித்திரவதை செய்துகொண்டது முற்றிலும் அவமானமாயிற்று. தாங்கள் முதல் நாள் எழுதிக் கொடுத்த பத்திரத்திற்கு முற்றிலும் மாறாக, அன்றையதினமே வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்வதற்கு நிச்சயதார்த்தம் நடத்தினால், தாங்கள் பாலாம்பாளுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் கொடுக்க நேருமே என்று நினைத்துப் பெரிதும் கவலையும் பீதியும் கொண்டாள். ஆனதுபற்றி நிச்சயதாம்பூல முகூர்த்தத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற யோசனையே நல்லதாகத் தோன்றியது. நிச்சய தாம்பூல முகூர்த்தம் நிறுத்தப்பட்டுப் போனதற்கு, தக்க காரணம் சொல்லாவிட்டால், மீனாகூஜியம்மாள் சந்தேகப்படுவதன்றி, தன்னைப் பற்றிப் பலரிடத்திலும் அவதூறாக ஏதேனும் வம்பு பேசுவாளென்ற அச்சம் ஒரு புறத்தில் எழுந்தது. ஆதலால், முகூர்த்தம் இரண்டு நாட்கள் வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருப்ப தாக எழுதிவைத்தால், அதன் பிறகுதான் சிவஞான முதலியாரோடு நன்றாக ஆற அமர யோசனை செய்து, மீனாகூஜியம்மாளுக்கு முடிவான கடிதம் எழுதலாம் என்ற யோசனை தோன்றியது. உடனே, கல்யாணியம்மாள் எழுந்து முன்னதிகாரத்தில், மீனாகூஜியம்மாள் கண்மணிக்குக் காட்டிய கடிதத்தை எழுதிவைக்க, பொழுதும் விடிந்தது. அவள் உடனே எழுந்து, தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தனது வேலைக்காரர்களில் ஐவரை அழைத்து, மீனாகூஜியம்மாளுக்கு எழுதப்பட்ட கடிதத்தை ஒருவனிடம் கொடுத்தனுப்பிவிட்டு, வேறு நால்வரை, பங்களாக்களுக்கெல்லாம் அனுப்பி, முகூர்த்தம் பின்னால் நடக்கப் போகிறதென்று தனது பந்துமித்திரர்களுக்கு எல்லாம் சொல்லி விட்டு வரும்படி அனுப்பிவிட்டு, திரும்பவும் ஒரு லோபாவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/9&oldid=646359" இலிருந்து மீள்விக்கப்பட்டது