பக்கம்:மதன கல்யாணி-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மதன கல்யாணி

துரைராஜா- அப்படியா உமக்கு எங்கே வேலையோ?

பொன்னுசாமி:- நான் அச்சாபீசிலே கம்பாசிடர் வேலையிலே இருந்தேன்; இப்போது அந்த வேலை இல்லை. சும்மா இருக்கிறேன். என்னுடைய அண்ணாத்தைதான் சம்பாதிக்கிறார். எனக்குச் சாப்பிடுகிற வேலைதான் - என்றான்.

அதைக் கேட்ட துரைராஜா வேடிக்கையாக நகைத்து, “மனிதனுக்கு சாப்பிடுகிற வேலையைவிட முக்கியமான வேலை வேறே என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. நீர் நல்ல காரியம் செய்தீர்’ என்று பரிகாசமாகப் பேசினான்.

அதன் பிறகு பொன்னுசாமி நாயகர் என்ற அந்த மனிதன் ஒரு நாழிகை நேரம் வரையில் துரைராஜாவோடிருந்து, லோகாபிராம மாகப் பேசிவிட்டு, தனக்கு நேரமாகிறதென்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு தனது வீட்டிற்குப் போய்விட்டான்.

துரைராஜா மாறி மாறி உலாவுவதும் திண்ணையில் உட்கார்ந்து கொள்ளுவதுமாக இருந்து, சுந்தர விலாசத்தில் வைத்த விழியை வாங்காமலே கவனித்துக் கொண்டிருந்தான். முன்பு மதன கோபாலனுக்குத் துன்பம் செய்ய வேண்டும் என்ற குரோத நினைவை மாத்திரம் அவன் கொண்டிருந்தான். அண்டை வீட்டுக்காரன் சொன்ன வரலாறுகளைக் கேட்ட பிறகு, அவனது மனதில் வேறு பலவகையான நினைவுகளும் உணர்ச்சிகளும் உண்டாயின. உலகத்திலேயே இணையற்றவளான அந்த அற்புத மங்கையை, தான் அடையக் கூடாவிட்டாலும், அவளை ஒரு மூறையாவது கண்ணால் பார்த்தே தீரவேண்டும் என்ற ஒரு துராசை அவனது மனத்தில் எழுந்து உரமாக வதைக்கத் தொடங்கியது. மதனகோபாலன் தன்னைக் காட்டிலும் அதிகமான ஸ்திலோலன் என்றும், அவன் ஜெமீந்தார் வீட்டுப் பெண்களை எல்லாம் மயக்கிவிட்டான் என்றும், அவ்வாறு ஸ்திரிகளை மயக்க அதிகாரம் பெற்றவன் தான் ஒருவனே என்றும், மதனகோபாலன் இழிதொழில் செய்யும் ஏழை ஆதலால், அவனிடம் ஸ்திரீகள் மோகங்கொள்ள அவனுக்கு அவ்வளவு யோக்கியதை இல்லை என்றும் துரைராஜா பலவாறு நினைத்தவனாய், அவன்மீது முன்னிலும் ஆயிரம் மடங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/92&oldid=646364" இலிருந்து மீள்விக்கப்பட்டது