பக்கம்:மதன கல்யாணி-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 9i

வந்தேன். கண்மணியம்மாளுடைய நிச்சயதாம்பூல முகூர்த்தத்தை கல்யாணியம்மாள் ஒத்தி வைத்துவிட்டாளாம். அவளுக்கு உடம்பு நிரம்பவும் அசெளக்கியமாக இருக்கிறதாம். அந்த அம்மாளுடைய புருஷன் இஷ்டத்துக்கு மாறாக, இந்தக் கலியாணம் இப்போது நடக்கப் போவதைப் பற்றி, இந்த மாதிரி இடைஞ்சல் உண்டாகிறதோ என்று பயந்து, கலியாணத்தை கொஞ்ச காலம் கழித்து நடத்தலாம் என்று தீர்மானித்து விட்டார்களாம். அவர்கள் இந்த நிச்சயதாம்பூல முகூர்த்தத்தை இன்று நடத்தினால், கண்மணியம்மாள் கிணற்றில் குளத்தில் விழுந்து இறந்து போய்விடுவாளோ என்று, நாம் பயந்து கொண்டிருந்ததற்கு, இது ஒரு நல்ல சங்கதி அல்லவா?” என்றார்.

அதைக் கேட்ட மதனகோபாலன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவ னாய், “அந்தக் குழந்தையைப் பற்றித்தான் நான் நிரம்பவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்று வரும்படி என்னை அவள் கேட்டுக் கொண்டிருப்பதும், இந்த விஷயமாக என்னுடைய யோசனையைக் கேட்டு, அதன்படி நடந்து கொள்ளுவதற்காகத் தான் இருக்கலாம் என்று நான் நினைத்தேன். இன்று நான் அவளைச் சந்திக்காவிட்டால், இன்றைய ராத்திரியே தான் இறந்து போய்விடுவதாக எழுதி இருப்பதைப் பார்த்தால் அவள் என்னிடத்தில் அன்று சொன்ன உறுதியையே இன்னமும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்பது நன்றாகத் தெரிகிறது” என்றான். -

பசவண்ண:- இல்லாவிட்டால், இதற்குள் தன்னுடைய மனசை மாற்றிக் கொண்டா இருக்கப் போகிறாள். அந்தத் தறுதலைப் பையனிடத்தில் அந்தப் பெண்ணுக்கு ஒரு நாளும் பிரியம் உண்டாகாது. அவன் பாலாம்பாளை வைத்துக் கொண் டிருக்கிறதாகவும், அவள் இப்போது நாடகத்தையே விட்டுவிட்டாள் என்றும் நான் கேள்விப்பட்டேன். மாரமங்கலத்தாருடைய வீட்டில் சம்பந்தம் செய்தால், பெண் நல்ல செல்வத்திலிருந்து வாழும் என்பது மீனாகூரியம்மாளுடைய எண்ணம் போலிருக் கிறது. ஆனால் அந்தப் பையன் ஒரு பெருத்த சமஸ்தானத்து ஜெமீந்தாருக்குப் பிறக்கக் கூடியவனாகத் தோன்றவில்லை, அவன் அசல் பட்டணத்துச் சோம்பேறியைப் போல இருக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/95&oldid=646370" இலிருந்து மீள்விக்கப்பட்டது