பக்கம்:மதன கல்யாணி-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மதன கல்யாணி

பங்களாவின் பின் புறத்தில் உள்ள ராஜபாட்டைக்கு வந்து வண்டியை நிறுத்திக்கொண்டு இருக்கிறேன். நீ அவளிடத்தில் பேதி விட்டுவா இருவரும் வண்டியில் இங்கே வந்துவிடலாம்” என்றார். இவர் உண்மையில் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரானாலும், இவரது விருப்பப்படி இன்னம் சொற்ப காலம் வரையில் இவரை நாமும் பசவண்ண செட்டியார் என்றே குறித்து வருவோம்) பசவன்ன செட்டியார் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட மதன கோபாலன், “அப்படியே ஆகட்டும்” என்று மிகுந்த பணிவேர்டு அவருக்கு மறுமொழி கூறிவிட்டு, அவரது விருப்பப்படி கண்மணி யம்மாளது கடிதத்தை எடுத்துத் தனது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு அவரிடத்தில் வந்து தான் போய்விட்டு வருவதாகக் கூறி, செலவு பெற்றுக்கொண்டு வெளிப்பட்டான். ஒரு வேலைக்காரன் அவனை வெளியில் அனுப்பி வீட்டு வாசற் கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டான். வீட்டிற்குள் இருந்து வெளிப்பட்ட மதனகோபாலன் தேனாம்பேட்டையை நோக்கி நடக்கலானான்.

மதனகோபாலன் வீட்டிற்குள் இருக்கிறானோ அல்லது வெளியில் போயிருக்கிறானோ என்றும், அவன் அன்றிரவில் வீட்டை விட்டு வெளிப்படுவானோ என்றும் பலவாறு ஐயமுற்று நம்பிக்கை இழந்து மனத்தளர்வடைந்து இன்னமும் இருப்பதா போவதா என்பதைத் தீர்மானிக்க மாட்டாமல் தத்தளித்தவனாய் ஏங்கி எதிர்த்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த துரைராஜா திடீரென்று மதனகோபாலன் வெளிப்பட்டதைக் கண்டு பெருத்த வியப்பும், திகைப்பும், மகிழ்ச்சியும் கொண்டவனாய், அவன் வெளிப்பட்டது உண்மைதானோ அல்லது, தன் மனதின் பொய்த் தோற்றமோ என்று இரண்டொரு விநாடி நேரம் ஐயமுற்றான் ஆனாலும், அவன் வெளிப்பட்டது நிஜமான விஷயமே என்பதை உணர்ந்து திண்ணையை விட்டெழுந்து வாசலுக்கு வந்து, மெல்ல அவனைத் தொடர்ந்து செல்லலானான். மதனகோபாலன் பகல் நேரத்தில் வெளியில் வராமல் இரவில் வந்தது தனது எண்ணம் நிறைவேறுவதற்கு மிக்க அனுகூலமானதென்று நினைத்து துரை ராஜா தனது காரியம் ஜெயமாக முடிந்துவிட்டால், அது எப்படியும் மறுநாள் துரையம்மாளுக்குத் தெரிந்துவிடும் ஆதலால், தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/98&oldid=646375" இலிருந்து மீள்விக்கப்பட்டது