பக்கம்:மதன கல்யாணி-3.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 மதன கல்யாணி கொண்டபடி வந்து சேர்ந்து, "அடேய் ஜெவான்! என்ன தகரார்! (Hallo Constable What is the row about?)" srsörgy Dräß68sp l umso6Pussö அடித்தொண்டையால் மிகவும் தணிவாகக் கேட்டுக் கொண்டு நெருங்க உடனே ஜெவான் அந்த சார்ஜண்டை நோக்கி நிமிர்ந்து நின்று சலாம் செய்து, அந்தக் கொலையின் விஷயத்தையும், குற்றவாளி இன்னான் என்பதையும், அவன் தகரார் செய்வதையும் இரண்டொரு வார்த்தையில் கூற, உடனே துரை ஆத்திரமும கோபமும் தோற்றுவித்துத் திட்டிய வண்ணம் குதிரையை விட்டுக் கீழே இறங்கி வந்து தமது இடது கையால் மைனரை இறுகப் பிடித்துக் கொண்டு, "போ! நட கழுதை! என்ன போக்கிரித்தனம் செய்தாய்!" என்று கூறிய வண்ணம் தமது கையில் இருந்த பிரம்பால் மைனரது பின்புறத்தில் சுளிர் சுளி என்று நாலைந்து அடிகள் கொடுத்து, பூட்ஸ் போட்ட காலைப் பின்பககத்தில் பிரயோகப்படுத்த, மைனர் அதற்கு மேல் எந்த முரணடலும் செய்யாமல் அடங்கிப் போய்த் தான் அந்தக் கொலைக் குற்றத்தைச் செய்யவில்லை என்றும், தான் இன்னான் என்றும் தன்னை அவர்கள் அக்கிரமமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், பக்கத்திலிருக்கும் தனது பங்களாவிலிருந்து உலாவ வந்த தன்னை அவர்கள் பிடித்துக் கொண்டார்கள் என்றும் கூற, போலீஸ் சார்ஜண்டு அதை ஒப்புக் கொள்ளாமல், அவனை அதட்டியும், அடித்தும், அவன் உண்மையைச் சொல்லா விட்டால், நகத்தின் இடுக்குகளிலெல்லாம் ஊசிகளைச் சொருகப் போவ தாகவும், வேறே பலவகையான சித்திரவதை செய்துவிடுவ தாகவும் சொல்லிக் கொண்டே வர, மைனர் பெருத்த திகிலும் குலை நடுக்கமும் அடைந்து என்ன செய்வதென்பதை அறியாமல் மயங்கினவனாக நடந்தான். அப்போது அவர்கள் எல்லோரும் மைனரிருந்த பங்களாவினது வாசலை அடையவே, உடனே போலீஸ் சார்ஜாண்டு, "ஏ மைனர்! நீ இவர்களுக்கெதிரில் நிஜத்தைச் சொல்ல யோசிக்கிறாய் போலிருக் கிறது. இவர்கள எல்லாரும் இங்கேயே இருக்கட்டும. நானும் நீயும் பங்களாவுக்குள் தனியாக ஓரிடத்துக்குப் போவோம். அங்கேயா வது நீ உண்மையைச் சொல்லிவிடு" என்று கூறிய வண்ணம்,