பக்கம்:மதன கல்யாணி-3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மதன கல்யாணி அதைக் கேட்ட துரை தமது முகத்தை அதிருப்தியாகச் சுளித்துக் கொண்டு, "அது எந்த மூலைக்கு ஆகும்? நான் கமிஷனர் துரைக் கெல்லாம் பங்கு கொடுக்க வேண்டும். குறைந்தது ஒரு லட்சமாவது கொடுப்பதானால் பேசும்; அதுவும் இப்போதே வர வேணடும். வந்தால், உம்மை உடனே விடடுவிட்டுப் போய்விடும்படி ஜெவானை அனுப்பி விடுகிறேன்" என்றார். அதைக் கேடட மைனர், "என்னுடைய தாயார் தேனாம்பேட்டையில் இருக்கிறார்கள். நான் அங்கே போனால் லட்சம் ரூபாயை ஒரே நொடியில் வாங்கிக் கொடுத்து விடுவேன். நீங்களோ இப்போதே கேடகிறீர்கள். ஒரு காரியம் செய்யுங்கள். இப்போது இங்கே இருக்கும் நகைகள் எல்லாம் சுமார் ஆயிரம் ரூபாய் பெறும்; எல்லா நகைகளையும், ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளையும் வாங்கிக கொளளுங்கள்; அவ்வளவோடு இப்போது என்னை விட்டு விடுங்கள். நான் உடனே என்னுடைய தாயாரிடத்துக்குப போய், பாக்கி இருபதினாயிரத்தையும் வாங்கி உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறேன். என்னுடைய வார்த்தையை நம்புங்கள்" என்று உறுதியாகக் கூறி மிகவும் மன்றாடினான். துரை அந்த ஏற்பாட்டிற்கு இணங்க, உடனே ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளும் வந்து சேர்ந்தன. அதுவரையில் பாலாம்பாள் மைனரிடத்திலிருந்து அபகரித்துப் பல பெட்டிகளில் வைத்திருந்த சகலமான நகைகளும், ஒரு பொடடுப் பொடிகூட மிச்சமில்லாமல் வெளிப்பட்டன. பாலாம்பாள் அணிந்து கொண்டிருந்த மூக்குப பொடடு முதல் கால் மெடடி வரையில் உள்ள ஆபரணங்கள யாவும் ஒரு நிமிஷத்தில் கூடிவரமாயின. எல்லா வஸ்துக்களையும் இரண்டு சிறு சிறு மூடடைகளாக மைனர் கட்டி சார்ஜண்டு துரையினிடத்தில் நீட்ட, அவர் அவர்கள் இருவருக்கும் மிகவும் பிரியமாகவும் வணக்கமாகவும் சலாம் செய்து, மூட்டைகளை வாங்கித் தமது கால்களிடையில் துடைப்பக்கங்களில் இருந்த பெருத்த பைகளுக்குள் நுழைந்துக் கொண்டவராய், "சரி: வாருங்கள்; வெளியே இருப்பவர்கள் சந்தேகப்படாமல் நான் நடநது கொள்ள வேண்டும்; உம்முடைய கைகளைச் சேர்த்து ஒரு துணியால் கட்டி அழைத்துக் கொண்டு வெளியே போய், ஜெமீந் தாரையும ஆட்களையும் அனுப்பிய பிறகு நானும் ஜெவானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/102&oldid=853230" இலிருந்து மீள்விக்கப்பட்டது