பக்கம்:மதன கல்யாணி-3.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100 மதன கல்யாணி விசனமும் அடைந்தவனாகத் திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் செல்ல, ஜெமீந்தார் தாமும் திரும்பிப் போய் சார்ஜண்டுக்கு, எல்லா வற்றையும் காட்டி அழைத்துக் ിജ്ഞ வருவதாகச் சொல்லி விட்டுத் திரும்பி நடந்தார்; ஆட்கள் எல்லோரும் ஜெவானோடு சென்றனர். சார்ஜண்டு துரையோ அவ்விடத்திலிருந்து குதிரையை அதிக வேகமாக ஒட்டிக் கொண்டு போனார். அந்த இடத்திலிருந்து கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரது பங்கள சுமார் கால்மயில் தூரத்தில் இருந்தது; ஜெமீந்தார் தமக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த சார்ஜண்டைப் பார்த்த வண்ணம் ஒட்டமாகச் சென்றார். சார்ஜண்டு துரை அந்த பங்களாவின் வாசலில் குதிரையை நிறுத்தாமல் அப்பாலும் ஒட்டிப் போனதாகத் தெரிந்தது. அதைப் பற்றி ஜெமீந் தார் வியப்புற்றவராய் நடந்த சமயத்தில், குதிரை தலைகால் தெரியாமல் ஓடியதாகையால், அதன் முன்னம் கால்கள மடங்கிப் போகவே, குதிரை முன்பக்கத்தில் சடக்கென்று உட்கார்ந்து போயிற்று; சார்ஜண்டு துரை குதிரையின் முதுகிலிருந்து குபிரென்று கிளம்பிவிடப்பட்டு முன்புறத்தில் நாலைந்து கஜதுரத் திற்கப்பால் போய், தலைகுப்புற வீழ்ந்த வேகத்தில், அவரது நெற்றி, மூக்கு, மார்பு முதலிய இடங்களில் பலமாக அடிபட்டது. அவரது தலையில் இருந்த தொப்பி ஒரு தோல்வாரினால் மோவா யோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தமையால், அந்தத் தொப்பி குறுக்கிட்டே அவரது உயிரைக் காட்டாற்றியது. இல்லையானால், அவர் வீழ்ந்தவுடனே அவரது உயிர் நீங்கியிருக்கும். அப்படி இருந்தும் முகத்தில் பட்ட அடியினால் பொறிகலங்கிப் போகவே அவர் மூர்ச்சித்து அசையாமல் அப்படியே தரையில் கிடந்தார்; அந்தச் சமயத்தில் அந்த பங்களாவில் வாசலில் வந்து நின்று, ஜெமீநதாரது வருகையை எதிர்பார்த்திருந்த மதனகோபாலன் சார்ஜண்டுக்கு நேரிட்ட விபத்தைக் கண்டு ஓடோடியும் சென்று, மூர்ச்சித்து வீழ்ந்து கிடந்த அவரைத் திருப்பிப் படுக்கவைத்து அவரது உடம்பில் தாறுமாறாகச் சுற்றிக் கொண்டிருந்த கடிவாள வாரை அப்புறப்படுத்தி அந்தக குதிரையைப் பிடித்துக் கொண்டு போய், பங்களாவின் மதிட்சுவருக்குள் இருந்த ஒரு தென்னை மரத்தில் கட்டிவிட்டு ஓடிவந்தான். அதற்குள் ஜெமீந்தாரும் அங்கே வந்து