பக்கம்:மதன கல்யாணி-3.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 மதன கல்யாணி தடவப்பட்டிருந்த அழகிய கருத்த மீசைகள் கையோடு வந்து விட்டன. முற்றலான முகம் போல அதுகாறும் காணப்பட்ட அவரது முகம் நல்ல யெளவனப் பருவத்தைக் காட்டியது. வெண்மையாகத் தோன்றிய அவரது நிறம், எலுமிச்சம் பழ நிறத்துக்கு வந்தது. அந்த அற்புதமான மாறுபாட்டைக் கண்ட யாவரும் அளவிறந்த பிரமிப்பும் குழப்பமும அடைந்தவராய் ஸ்தம்பித்துப் போயினர். அப்போது சார்ஜண்டு துரை மூர்ச்சை தெளியாமல் கிடந்தமை யால், ஜெமீந்தார் அந்த துரையின் உடம்பை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த கால்சட்டை மேல்சட்டை பூட்ஸ் முதலியவற்றை விலக்கும்படி சொல்ல, இரண்டு வேலைக்காரர்கள் அவைகளை விலக்கினார்கள். ஆகா! என்ன விந்தை! என்ன ஜெகஜ்ஜால வித்தை சார்ஜண்டு துரையின் உடைகளுக்குள் ஒரு யெளவனப் பெண்ணின் சரீரம் மறைந்து கொண்டிருந்தது! அவள் கட்டழகும், உருட்சிதிரட்சி வாய்ந்த உறுப்புகளும் பெற்றவளாகக் காணப்பட் டாள். அவளது கழுத்து முதல் கணைக்கால் வரையில் உறுதியான பனியன் சடடையால் மூடப்படடிருந்த காட்சி, தாராசசாங்கத்தில் எண்ணெய தேய்க்கும் சமயத்துக் காட்சி போல இருந்தது. ஆனால் நன்றாக அகன்றிருந்த அவளது அழகிய மார்பினிடையில் மலைப் பள்ளத்தாக்கு போல இருந்த சரிவான பள்ளத்தை வெல்வெடடி னால் உள்ளங்கை அகலத்தில் தைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பஞ்சுமெத்தை நன்றாகத் துர்த்து மேடுபள்ளமின்றி சமப்படுத்திக் கொண்டிருந்தது. அவ்வாறு இந்திரஜால மகேந்திர ஜாலத்தில் ஒரு வஸ்து வேறொரு வஸ்துவாகக் காணப்படும் மாறுபாடு போல இருந்த அந்த விநோதக் காட்சியைக் கண்ட ஜெமீந்தார் முதலிய எல்லோரும முற்றிலும் ஸ்தம்பித்து சித்திரப் பதுமைகள் போல அப்படியப படியே நின்றுவிட்டனர். அது ஒரு பெண்பிள்ளை என்பது தெரிந்த உடனே அதுகாறும் அவளைத் திண்டிக் கொண்டிருந்த ஆண்பாலார் யாவரும் துர விலகினர். மதனகோபாலன் தனது கரத்தில் இருந்த தண்ணிரை ஒரு வேலைக்காளியிடத்தில் கொடுத்து அவளது முகத்தில் ஒற்றிக் கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டு, இன்னொருவளைக் கொண்டு அவளது வாயைத் திறந்து