பக்கம்:மதன கல்யாணி-3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 103 தண்ணில் சிறிதளவு உள்ளே வார்க்கச் செய்தான். அவ்வாறு, வாய்க்குள் விடப்படட குளிர்ந்த ஜலம் தொண்டையில் படவே, அந்தப் பெண் தனது கண்களை விழித்துக் கொண்டு விழிகளை நாற்புறங்களையும் சுழற்றிப் பார்த்து மருள மருள விழித்தவளாய் அங்கிருந்தோரது முகங்களை எல்லாம் உற்று நோக்கினாள்; அப்போது அந்த வேலைக்காரி தண்ணி பாத்திரத்தை அவளது வாயில் வைத்துச் சிறிதளவு தண்ணிர் பருகுவித்தாள். உடனே அந்த யெளவனப் பெண் தனது கண்களை மறுபடியும் மூடிக் கொண்டு ஐந்து நிமிஷ நேரம் அயர்ந்திருந்தவள் முன்னிலும் அதிகத் தெளிவடைந்து கணகளை நன்றாக விழித்துக் கொண்டு ஜெமீந்தாரையும் மற்றவர்களையும் நோக்கி திகிலும், கலக்கமும் நடுக்கமும் அடைந்தவளாய் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டாள். அப்போது ஜெமீந்தார் அந்தப் பெண்ணைத் தலைமுதல் கால் வரையில் இரண்டு தரம் கவனித்துப் பார்த்தவராய் மிகுந்த பிரமிப்பும் திகைப்பும் அடைந்து அவளது முகத்தின்மேல் வைத்த விழியை வாங்காமலே இருந்தார். அந்த முகம் அவருக்கு மிகவும் அதிகமாகப் பழகிய சொந்த மனிதரது முகமாகக் காணப்பட்டது. அவள் தமது சொந்த உற்வினர்களுள் ஒருத்தி போலக் காணப்பட்டாள. ஆனால், அவள் எவ்விடத்தில் இருந்தவள், அவளுக்கும் தமக்கும எவ்விதமான பாந்தவ்வியம் எனபவை மாத்திரம் தெரியவில்லை. அவர் மிகவும் ஆழ்நது சிந்தித்து அவளது முகத்தையும் சரீரத்தையும் கூாந்து கூர்ந்து பார்க்கிறார்; கைவிரல்களினால நெற்றியை அழுத்திக் கொளளுகிறார். அவ்வாறு அவர் ஐநது நிமிஷ நேரம் தத்தளித்திருக்க, அவரது மனதில ஒருவித ஞாபகம உணடாயிற்று; பதினைந்து வருஷ காலத்திற்கு முன் இறந்து போன தமது அழகான யெளவன மனைவியினது முகமும், உடம்பும், சாயலும் எப்படி இருந் தனவோ அப்படியே இநதப் பெண்ணின் முகம் முதலிய யாவும் இருந்தனவென்ற நிச்சயம் ஏற்பட்டது. இறந்து போய்விட்டதாகத் தாம் நினைத்துக் கொண்டிருந்த தமது அரிய மனைவி தான் உயிர்பெற்றுத் திருமபி வந்துவிட்டாளோ என்ற எண்ணம் தோன்றியது. அந்தப் பெண்ணினது முகத்தைப் பார்க்கப் பார்க்க, அவரது மனமும் தேகமும கரைகடந்து பதறி வாத்சல்யத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/107&oldid=853235" இலிருந்து மீள்விக்கப்பட்டது