பக்கம்:மதன கல்யாணி-3.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 மதன கல்யாணி மேலீட்டால் கட்டுவிட்டு நெக்குநெக்குருகிப பாகாய்க் கரையத் தலைப்பட்டன. தமது மனைவிக்குத் தமது கையால் கொள்ளி வைத்துக் கொளுத்தியிருக்க, பதினைந்து வருஷங்களுக்குப் பிறகு அதே யெளவனப் பருவமுடையவளாக அவள் எப்படித் திரும்பி வரமுடியும் என்ற சந்தேகமும், ஒருகால் இந்தப் பெண் அவளது தங்கையாக இருக்குமோ என்ற சந்தேகமும் கொண்டார். தமது மனைவிக்கு சொந்தத் தங்கையு மில்லை; ஒன்றுவிட்ட தங்கை களுமில்லை என்பதை அவர் நிச்சயமாக அறிந்தவர் ஆதலால், இவள அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வேறே யாராகவாகிலும் இருப்பாளோ என்று சந்தேகித் தார். அவளது வடிவ ஒற்றுமையைப் பற்றிய சந்தேகமும், வியப்பும் ஒருபுறம் அவரை வருத்தியதோடு, அவள் போலீஸ் சார்ஜண்டு துரை போல வேஷம் போட்டுக் கொண்டு வந்த வகையென்ன என்ற ஐயமும் வியப்பும் அளவுகடந்து வதைத்தன. அவள் முதலில் வந்த போது துடைப் பக்கங்கள் சாதாரணமாக இருந்ததையும், மைனரை அழைத்துக் கொண்டு அவனது பங்களாவிற்கு போய்விட்டுத் திரும்பி வந்த பிறகு இரண்டு துடைப் பக்கங்களிலும் பெருத்த பெருத்த புடைப்புகள் இருந்ததையும் ஜெமீந்தார் கண்டு, அதைப்பற்றி ஒருவாறு ஐயமுற்றிருந்தாா ஆகையால், கால் சட்டைகளின் பைகளுக்குள் அவர் தமது கையை நுழைத்து அவற்றிற்குள்ளே இருந்த மூட்டைகளை எடுத்து அவிழ்த்துப் பார்த்தார்; அவைகள் முற்றிலும் நோட்டுகளாகவும் விலையுயர்ந்த ஆபரணங்களாகவும இருக்கக் கண்டாா. காணவே, அவைகள் மைனரால கொடுக்கப் பட்ட லஞ்சப் பொருள்கள் என்பது சந்தேகமறத் தெரிந்தது. போலீஸ் இலாகாவின் உத்தியோகங்கள் பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுவன அல்ல ஆகையால், அவள் அவ்வாறு வேஷந்தரித்து வந்தது. ஜனங்களை ஏமாற்றிப் பொருள் பறிப்பதன் பொருட்டாகிலும், அல்லது, போலீஸ் சார்ஜண்டைப் போல வரவேண்டும் என்ற வீண் பெருமை, அல்லது, பைத்தியக் கார அவாவின் பொருட்டாகிலும் இருக்க வேண்டும் எனறு ஜெமீந்தார் பலவித யூகங்கள் செய்யலானார். அவ்வளவு அபூர்வமான கட்டழகும் யெளவனமும் வாய்ந்த அதன் அணங்கு, ஸ்திரீகளுக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னும்