பக்கம்:மதன கல்யாணி-3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 105 லட்சணங்களை எல்லாம் காற்றில் தூற்றி விட்டு, ஆண்மக்களும் செய்ய அஞ்சத்தக்க அவ்வளவு பெருத்த மோசத்திலும் துணிகர மான செய்கையிலும் இறங்கியது அவரால் சகிக்க இயலாத அற்புதமாகத் தோன்றி அவரது மனதை வதைத்தது. அவளது மனம் அப்படிப்பட்ட துன்மார்க்கத்தில் இறங்கியதைக் குறித்து அவர் பெரிதும் இரக்கமும் விசனமும் அடைந்தவராய் அந்தப் பெண்ணினது முகத்தையே உற்று நோக்கிய வண்ணம் இருந்தார். மதனகோபாலன் வியப்பினாலும் பிரமிப்பினாலும் ஸ்தம்பித்து ஊமையன் போல உட்கார்ந்திருந்தான். அந்தச் சமயத்தில் அந்தப் பெண் மறுபடியும் தனது கண்களைத் திறந்து கொண்டு அவர்களை நோக்கினாள். அவள் சகிக்க இயலாத வெட்கமும், சங்கடமும், திகிலும் கொண்டிருக்கிறாள் என்பதை அவளது முகம் நன்றாகக் காட்டியது. அவள் ஜெமீந்தாரை நோக்கி, "ஐயா! தாங்கள் செய்வது நியாயமான காரியந்தானா? நான் கீழே வீழ்ந்ததைக் கண்டு தாங்கள் என்னை இங்கே கொண்டு வந்து உபசரித்து, என் உயிரைக் காப்பாற்றியது நல்ல தரும விஷயந் தான். ஆனால், என்னுடைய பணங்களும் நகைகளும் இருக்கும் பையை எடுத்துப் பிரித்துப் பார்ப்பது நியாயமாகுமா? அவைகளில் ஏதாவது ஒன்று காணாமற் போனால், அதை யார் எடுத்தார்கள் என்று நினைக்கிறது?" என்று கூறிய வண்ணம் தனது கால சட்டையையும் மேல் சட்டையையும் எடுத்துத் தனது தேகத்தை மறைத்துக் கொள்ள முயன்றாள். அவளது கிலேசத்தைக் கண்ட மதனகோபாலன் உடனே அப்பால் போய், விலையுயர்ந்த ஒரு சால்வையைக் கொணர்ந்து பிரித்து அவள்மீது போர்த்தினான். அப்போது ஜெமீந்தாா அவளை நோக்கி இரக்கமாகவும் விசனமாகவும் பேசத் தொடங்கி, "பெண்ணே! உன்னைப் பார்த்தால், தக்க பெரிய மனிதருடைய வீட்டுப் பெண் போல இருக்கிறாய்! நீ இப்படிப் போலீஸ் சார்ஜண்டு துரை போல வேஷம் போட்டுக் கொண்டு வரவேண்டிய காரணம் என்ன? இப்படி வந்து மைனருடைய சொத்துகளை எல்லாம் அபகரித்து வந்த காரணமென்ன? இந்தக் காரியங்கள் எல்லாம் உன்னைப் போன்ற பெண்பிள்ளைகள் செய்யக்கூடியவைகளா? நான் இப்போது உடனே போலீசாரை வரவழைத்து உன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/109&oldid=853237" இலிருந்து மீள்விக்கப்பட்டது