பக்கம்:மதன கல்யாணி-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 7 செட்டியார்:- கோமளேசுவரன் பேட்டையில் சுந்தர விலாஸம் என்று ஒர் இடம் இருக்கிறது; அதிலிருந்தேன். வக்கீல்:- அதிலிருப்பவர் தான் தங்களுக்கு இந்த பங்களாவை வாங்கிக் கொடுத்த நண்பர் போலிருக்கிறது? செட்டியார்:- இல்லை, இல்லை. அதிலிருப்பது என்னுடைய கூட்டாளியைச் சேர்ந்த மனிதர். அவர் யார் என்பதையும், சுருக்கமாகச் சில வார்த்தைகளில் நான் உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். என்னுடைய கூட்டாளி பதினெட்டு வருஷங்களுக்கு முன் அவருடைய யெளவன சம்சாரத்தை இந்த ஊரில் இழந்த பின், அந்த விசனத்தைப் பொறுக்கமாட்டாமல் உண்மையிலேயே பைத்தியங் கொண்டவராக இருந்தாராம். அவர் இந்த ஊரைவிட்டு துர தேசமாகிய வெளியூருக்குப் போயிருந்தால் அந்தப் பைத்தியம் நீங்குமென்று டாக்டர்கள் சொன்னார்களாம். அப்போது உயிர் ஒன்றும் உடலிரண்டுமென எவ்வளவு அன்னியோன்னியமான சிநேகிதர்களாக அவரும் நீங்களும் இருந்தவர்களாம். அவருடைய தங்கை, தம்பியின் குடும்பத்தார் முதலிய எல்லோருக்கும் அவருக்கும் மனஸ்தாபம் இருந்ததால், அவர் உங்களுடைய ஆதரவிலேயே இருந்தாராம். அவர்களுடைய சுந்தரமான குழந்தை கள் இரண்டும் தங்களுடைய பாதுகாப்பிலேயே இருந்தார்களாம். அப்போது டாக்டர்களின் புத்திமதிப்படி அவரைத் தாங்கள் மைசூருக்கு அனுப்பி வைத்தீர்களாம். குழந்தைகள் மாத்திரம் தங்களிடத்திலேயே இருந்தார்களாம். ஒரு வருஷ காலத்தில் அவருக்குப் பைத்தியம் தெளிவடைந்து போய்விட்டதாம். அவர் உடனே இங்கே வரவும், குழந்தைகளைப் பார்க்கவும் ஆசைப் பட்டாராம். குழந்தைகள் அவருடைய சம்சாரத்தைப் போல அதிக சுந்தரம் பொருந்தியவர்களாக இருந்ததனால், அவர்களைக் கண்டால் மறுபடியும் பைத்தியம் திரும்பி விடுமென்று டாக்டர்கள் சொன்னதாகவும், இன்னம் சில வருஷ காலம் அங்கேயே இருந்து வருவது நல்லதென அவருக்குக் கடிதம் எழுதினர்களாம். அந்தச் சமயத்தில் தங்களுடைய விருப்பத்தின்படி குழந்தைகளின் சவரக்ஷணைக்காக அவர் உங்கள் பேருக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு உண்டியல் அனுப்பினாராம். அதன் பிறகு ஆறுமாச காலத்திற்குள், உங்களிடத்திலிருந்து வந்த கடிதத்தில், குழந்தைகளிரண்டும் ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/11&oldid=853238" இலிருந்து மீள்விக்கப்பட்டது