106 மதன கல்யாணி
அவர்களிடத்தில் ஒப்புவித்து விட்டால், நீ அநியாயமாகப் பெருத்த தண்டனைக்கு ஆளாகிவிடுவாயே! அப்புறம் இந்தப் பணமும் நகையும் மைனரை அல்லவா சேர்ந்துவிடும். அவைகளை எல்லாம் உணராமல் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டாயே! இவ்வளவு சாமர்த்தியம் செய்த நீ பெருத்த முட்டாள் என்றே நான் நினைக்கிறேன்! கண்ணே! உன் முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஒருவித இரக்கமும் விசனமும் உண்டாகின்றன. உனக்கு எங்களால் ஏன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்ற அவா உண்டாகிறதேயன்றி, உன்னைத் தண்டனைக்கும் அவமானத் துக்கும் ஆளாக்க எங்களுக்கு விருப்பமுண்டாகவில்லை. நீ உன்னுடைய வரலாறுகளை எல்லாம் ஒளியாமல் எங்களிடத்தில் சொல்லிவிடுவாயானால், நீ இனியாவது நல்ல வழிக்கு வரும படியான மார்க்கத்தை நான் தேடுகிறேன். மறைப்பாயானால், நான் தாக்ஷண்ணியம் பாராமல், உன்னை உடனே போலீசாரிடமே ஒப்புவித்து விடுவேன்" என்று கண்டிப்பாகவும் அன்பாகவும் கூறினார்.
அதைக் கேட்ட அந்த ஸ்திரீ மிகுந்த கிலேசமும் அச்சமும் அடைந்தவளாய்ச் சிறிது நேரம் மெளனமாக இருந்து, "ஐயா! தாங்கள் சொன்னது நியாயமான சங்கதி. தாங்கள் மனசு வைத்தால் என்னை இப்போது அவமானத்துக்கும் தண்டனைக்கும் ஆளாக்கி என்னைத் தொலைத்துவிடலாம். பல நாளைய திருடன. ஒரு நாள அகப்படடுக் கொள்வதுண்டு. நான் அப்படி அகப்படமாடடேன என்று இதுவரையில் நான் நினைத்து இறுமாப் படைந்திருந்தேன். ஆனால் நான் இன்றைய தினம் வசமாக மாட்டிக் கொண்டேன; தாங்கள் என்னை அதிகாரிகளிடத்தில் காட்டிக் கொடுப்பதில்லை என்று உறுதியாகச் சொன்னால் நான் என்னுடைய வரலாறுகளை எல்லாம் உடனே சொல்லி விடுகிறேன்" என்றாள்.
ஜெமீந்தார்:- அந்த உறுதியை நான் தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே. நீ பயப்படாமல் எந்தச் சங்கதியையும் சொல்லலாம - எனறார்.
அந்த ஸ்திரீ "ஐயா! நான் யார் என்பதும், என்னுடைய தாய் தகப்பன்மார் எவர்கள் என்பதும் எனக்கே இதுவரையில் தெரிய
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/110
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
