பக்கம்:மதன கல்யாணி-3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 107 வில்லை. ஆனால் எனககு ஒரு தம்பி இருக்கிறான். அவனும் நானும் இளங்குழந்தைகளாக இருந்த போதே எங்களுடைய தாயும தகப்பனும் எங்களை அநாதைகளாக விட்டு இறந்து போய் விட்டார்களாம். மைலாப்பூரில் உள்ள ஒரு வக்கீல் எங்கள் மேல் இரக்கம் கொண்டு, எங்களை சைதாப்பேட்டையில் உள்ள அவருடைய குடியானவன் ஒருவன் வீட்டுக்கு அனுப்பி அங்கேயே வைத்து வளர்க்கச் செய்தார். எங்களுக்கு ஆன செலவுகளை எல்ல்ாம் அவரே கொடுத்து எங்கள் இரண்டு பேரையும் 7-வது வகுப்பு வரையில் படிக்க வைத்தார் அதன் பிறகு என்னுடைய தம்பியை ஒரு குமாஸ்தா உத்தியோகத்திலும் என்னைப் பள்ளிக்கூடத்து வாத்திச்சி வேலையிலும் அவரே அமர்த்தினார். அவ்வளவோடு, அவர் எங்களுக்கு உதவி செய்வதை நிறுத்திக் கொண்டார். நான் அடையாற்றில் சொற்ப சம்பளத்தில் வாத்திச்சியாக இருந்து வந்தேன். ஆனாலும், எனக்குப் பணத்தின் மேலும, நகைகளின் மேலும, உலகத்தில் உள்ள இனிமையான பெண்களின் மேலும் பிரமாதமான பேராசை தோன்றியதன்றி, என்னுடைய எண்ணங்களும், நடையுடை பாவனைகளும் அசாத்தியமாகவும் அமிதமாகவும் இருந்து வந்தன. அந்தச் சமயத்தில அந்த ஊரில சுந்தரம் பிள்ளை என்ற ஒருவர் ஹெட்கான்ஸ்டேபில் வேலையில் இருந்தார். அவர் மகா சாமர்த்தியமும் அழகுமுடையவர். அவர் எனனிடத்தில் அடிக்கடி வந்து வேடிக்கையாகவும் சாதுர்யமாகவும் பேசி எனக்கு வேண்டிய பண உதவிகளை எல்லாம் செய்து வந்து என் மனசைக் கவர்நது விட்டார். என்னைக் கணடிக்கும்படியான பெரியோர் எவரும் இல்லாமையால் நான அவருடைய பிரியப்படி நடந்து கடைசியில் என் வேலையை விட்டுவிடடு அவருடைய சவரகூடி ணையில் போய்விட்டேன். அதன் பிறகு அவருக்குப் போலீஸ் உத்தியோகம போய்விட்டது; ஆனால் அவர் மகா தந்திரமும் தைரியமும வாய்நதவர் ஆகையால், அவர் போலீஸ் உடுப்புகளில் பலவற்றை அபகரித்தும் புதிதாகச் செய்தும் வைத்துக் கொண்டார் எனக்கும் அவர் பல தந்திரங்களைப் போதித்தார். அவரும் நானும் போலீஸ் இன்ஸ்பெக்டர் போலவும், சார்ஜண்டு போலவும், ஹெடகான்ஸ்டேபில் போலவும், கமிஷனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/111&oldid=853240" இலிருந்து மீள்விக்கப்பட்டது