பக்கம்:மதன கல்யாணி-3.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


108 மதன கல்யாணி போலவும், ஒரு நாளைக்கு ஒரிடமாக போய் பலவகையில் பொருள் தேடிக் கொண்டு வருவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். 27-மயில் சுற்றளவுடைய இந்தப் பெருத்த பட்டணத்தில் எத்தனையோ போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. அவைகளில் எத்தனையோ இன்ஸ்பெக்டர்களும், சப் இன்ஸ்பெக்டர்களும், சார்ஜண்டுகளும் இருக்கிறார்கள். ஆகையால், எங்களைக் காணும் உண்மையான போலீசார், நாங்களும் ஏதோ ஒரு ஸ்டேஷனைச் சேர்ந்த போலீசார் என்று நினைத்துக் கொண்டு போவது வழக்கமாகையால், நாங்கள் அவர்களுடன் கூட இருந்தே கொள்ளையடித்து வருகிறோம். எங்களிடத்தில் பல ஆட்களும் இருக்கிறார்கள். நாங்கள் சில குதிரைகளையும் வண்டிகளையும் மறைவான ஒரிடத்தில் வைத்திருக்கிறோம். இன்றைய தினம் நான் போலீஸ் சார்ஜண்டாக மைலாப்பூர்ப் பக்கம் வந்தேன். அவர் இன்ஸ்பெக்டராக வணணாரப்பேட்டைப் பக்கம் போயிருக்கிறார். நான் இங்கே வந்த இடத்தில் மைனர் அகப்பட்டுக் கொண்டார். நான் அவரைத் தப்பவைப்பதாகச் சொல்லி அவரிடத்தில் இந்தப் பொருள்களை எல்லாம் அபகரித்தது போலவே, நாங்கள் இருவரும் வெகு சுலபத்தில் பல இடங்களில் அபகரித்து வந்திருக்கிறோம். இதுதான் உண்மையான வரலாறு; நீங்கள் எங்களை இனி எந்த வழியில் விட்டாலும் சம்மதந்தான்" என்று இறைஞ்சிய வண்ணம் கூறினாள். அந்த வரலாற்றைக் கேட்ட மதனகோபாலனும் ஜெமீந்தாரும் திகைப்பும் வியப்பும் திக்பிரமையும் கொண்டு பலே! சபாஷ்! என்று முக்கின் மேல் விரலை வைத்தனர். ஜெமீந்தார் தாம் என்ன சொல்வதென்பதை அறியாமல் சிறிது நேரம் இருந்தபின் அவளை நோக்கி, "பெண்ணே உன்னுடைய பெயரென்ன?" என்று அன்பாக வினவினார். அவள், "என் பெயர் ராஜாயி அம்மாள்" என்றாள். ஜெமீந்தார்:- ஆகா! எவ்வளவு உயர்வான பெயர்! ஒரு பெருத்த மகாராஜாவின் பட்டமகிஷிக்கு வைக்க வேண்டிய பெயரை வைத்துக் கொண்டிருக்கிறாய். அது போலவே, ஒரு ராஜாத்திக்கு இருக்க வேண்டிய உன்னத அழகும் உன்னிடத்தில் இருக்கிறது. ஆனால் உன்னுடைய புத்திமாத்திரம் கேவலம் கொள்ளைக்காரியின் புத்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது! திடர்டா என்ன விபரீத