பக்கம்:மதன கல்யாணி-3.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


110 மதன கல்யாணி அதைக் கேட்ட ஜெமீந்தாரும், மதனகோபாலனும் முன்னிலும் ஆயிரமடங்கு அதிகமான பிரமிப்பும் ஆச்சிரியமும் அடைந்து ஸ்தம்பித்துப் போய் கால் நாழிகை நேரம் நின்றனர். உடனே மதன கோபாலன், "அடாடா என்ன ஆச்சரியம்! துரைஸானியம்மாள் களளம் கபடம் முதலிய துர்க்குணங்களையே அறியாத மகா நுட்ப மான புத்தியை உடையவளாயிற்றே! அவளுடைய கதி இப்படியா முடிந்தது! ஐயோ பாவம்! மைனரோ இப்படியானான். அந்தப் பெண் அப்படிப் போய்விட்டாள். கல்யாணியம்மாளுடைய நிலைமை நிரம்பவும் பரிதாபகரமாக ஆகிவிட்டதே!" என்று மிகுந்த விசனமும் உருக்கமும் தோன்றக் கூறினான். ஜெமீந்தார், "ஏழை அழுத கண்ணி கூரிய வாளையொககும என்பது பொய்யாகுமா? ஊரார் வயிற்றெரிச்சல் சுமமா விட்டு விடுமா? கல்யாணியம்மாளுக்கு இந்த அவமானமெல்லாம் போதாது; அவள் பரிசுத்தமான குணமுடையவளாக இருந்தால் தானே பிள்ளைகளும் அப்படி இருப்பார்கள்; தாய் ஒரடி பாய்ந்தால் குட்டி ஒன்பதடி பாய்கிறது; ராஜாயி அம்மா! இதெல்லா மிருக்கட்டும். உன்னையும் உன் தம்பியையும் உத்தியோகங் களில் யாரோ ஒரு வக்கீல் அமர்த்தினதாகச் சொன்னாயே! அந்த வக்கீல் சைதாப்பேட்டையில் இருப்பவரா? அவர் அதன் பிறகு உங்களைக் கவனிக்கவே இல்லையா?" என்றார். ராஜாயி:- அவர் இதோ இந்த மைலாப்பூரில் இருக்கிறார். நாங்கள் வேலையில் அமர்ந்த பின் அவர் எங்களைக் கவனிக்கவில்லை. ஜெமீந்தார்:- அவருடைய பெயரென்ன? ராஜாயி:- அவரை சிவஞான முதலியார் என்பார்கள். ஜெமீந்தார்:- (மிகவும் திடுக்கிட்டு) ஹா! யார்? சிவஞான முதலி யாரா? இதோ கச்சேரித் தெருவில் இருக்கிறாரே, அந்த சிவஞான முதலியாரா? ராஜாயி:- ஆம். அவர் தான் - என்றார். அதைக் கேட்ட ஜெமீந்தார் அளவு கடந்த கலக்கமும் குழப்பமும் துயரமும் அடைந்து, கால் நாழிகை நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந் தவராய் மறுபடியும் அவளை நோக்கி, "பெண்ணே! இப்போது உங்கள் இருவருடைய வயசும் என்ன ஆகிறது?" என்றார்.